உணர்வுகளின் சிம்பொனி கலவை ( Symphony Of Emotions )
9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் !
தமிழில் Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான, “நவரசா” ஆந்தாலஜி பட வெளியீட்டை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ் தொழிற்துறையையும் ஒன்றிணைத்து, 9 படங்கள் 9 உணர்வுகளின் சிம்பொனி கலவையை உலகளவில் ரசிகர்கள் கண்டு களிக்கும்படியான, மிகப்பெரும் விழாவாக இணையத்தில் அரங்கேற்றியது Netflix நிறுவனம்.
வியாழன் ஆகஸ்ட் 5 ; Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான “நவரசா” ஆந்தாலஜி படத்தின் வெளியீடு நெருங்கி விட்டது.
நவரசாவின் உலகளாவிய வெளியீட்டிற்காக, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிரபார்ப்பை பூர்த்தி செய்ய அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்க படத்தில் காட்டப்பட்டுள்ள, ஒன்பது உணர்ச்சிகளின் சுவையை அனைவருக்கும் வழங்க, Netflix உலகளாவிய ரசிகர் நிகழ்வான “உணர்வுகளின் சிம்பொனி கலவை ( Symphony Of Emotions )” நிகழ்வை நடத்தியது
“நவரசா” தமிழின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் பிரமாண்ட படைப்பு. கோவிட் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட, திரைத்தொழிலாளிகளின் நலன் காக்க, தமிழ் சினிமாவின் பெருமை மிகு ஆளுமையான இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் ஒன்பது பகுதிகளை கொண்ட ஆந்தாலஜி படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்திய திரையுலகில் ஒரு அற்புதமாக உருவாகியிருக்கும் இந்த படைப்பு, Netflix தளத்தில் ஆகஸ்ட் 6 அன்று உலகம் முழுதும் வெளியாகிறது. இப்படம் வெளியாவதை ஒட்டி இதில் பங்குபெற்ற கலைஞர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இணையத்தில் அரங்கேறியது. நவரசாவில் பங்கு கொண்ட தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர்கள் அனைவரும், எந்த வித ஊதியமுமின்றி, நல்ல நோக்கத்தின் அடிப்படையில் பணியாற்றியுள்ளனர்.
Netflix நடத்திய உலகளாவிய ரசிகர் நிகழ்வான “உணர்வுகளின் சிம்பொனி கலவை ( Symphony Of Emotions )” நிகழ்வில் பெருங்கலைஞர்கள் பிரதிபலனின்றி ரசிகர்களுக்காக ஒவ்வொரு உணர்வையும், இசையால் வடித்து காட்டினார்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இந்நிகழ்வை தொகுத்து வழங்கி, கலைஞர்கள் அனைவரோடும் உரையாடினார்.
உணர்வுகளின் சிம்பொனி கலவையாக வெளிப்பட்ட இந்நிகழ்வில், இசைக்கலைஞர்களான புல்லாங்குழல் வல்லுநர் நவீன் குமார், அபிஷேக் குமார்,K C லாய், விவேக் ராஜகோபாலன், பியூஷ் ரஜனி &The Fine Tuners, மகேஷ் ராகவன், நந்தினி சங்கர், சாஷா திருப்பதி, அனந்தா R கிருஷ்ணன், Ricky Kej, குணால் நாயக் ஆகியோர் உணர்வுகளின் சிம்பொனி இசையை இசைத்தார்கள். மேலும் முத்தாய்ப்பாக 50 பேர் கொண்ட பாடகர்களின் பின்னணி குரல் நிகழ்ச்சி, வரலாற்று நாயகன் A R ரஹ்மான் அவர்கள் மேற்பார்வையில் நிகழ்த்தப்பட்டது.
நவரசா படைப்பின் 9 படங்களை சேர்ந்த படைப்பாளிகள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்வில் இணைந்து தொகுப்பாளருடன் உரையாடினார்கள். முழு மாலைப்பொழுதும் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமைந்தது.
ரசிகர்கள் முன்னிலையில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில்.. இன்றைய மாலைப்பொழுதில், இங்கு இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இப்படைப்பை திறமையாளர்கள் இணைந்து, சிறப்பு மிக்க படைப்பாக உருவாக்கியதில் பெருமைகொள்கிறோம். நவரசா மிகச்சிறந்த திறமைகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதால், ஒரு சிறப்பு மிகு அனுபவமாகவே இருந்தது என்றார்.
தயாரிப்பாளர் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் கூறியதாவது..
இப்படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் கோவிட் -19 உடைய தீவிரமான இரண்டாவது அலையின் இன்னல்களுக்கிடையில் தான் பணியாற்றினர், அனைவரும் இந்த படத்தில் தங்கள் முழு அர்ப்பணிப்பை தந்து, மிக கடுமையான உழைப்பில் இப்படைப்பை உருவாக்கியுள்ளனர். நிறைய பேருக்கு உதவ வேண்டுமென நிறைய படங்களை எடுக்க திட்டமிட்டோம். திரையுலகில் அனைவரையும் இணைக்க நினைத்தோம். இன்னும் அதிகப்படியான கலைஞர்களை இனைக்கும் பொருட்டு, மணிரத்னம் 10 வது ரசத்தையும் உருவாக்கலாம் என்றார். அந்த வகையில் ஒரு பெருமை கொள்ளும் படைப்பை உருவாக்கியது மகிழ்ச்சி.
“நவரசா” மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம். இந்திய திரையுலகம் முன்னெப்போதும் கண்டிராத வகையில், தமிழின் முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்து வரலாற்று சிறப்பு மிக்க படைப்பாக நவரசாவை உருவாக்கியுள்ளனர்
“நவரசா” ஆந்தாலஜி படத்தை வரும் 2021 ஆகஸ்ட் 6, 12:30 PM அன்று, Netflix தளத்தில் கண்டுகளியுங்கள்.