”உங்களை வருத்தமடைய செய்தது எது எனத் தெரியவில்லை” – பி.சி.ஸ்ரீராமிற்கு பதிலளித்த கங்கனா

0
370

”உங்களை வருத்தமடைய செய்தது எது எனத் தெரியவில்லை” – பி.சி.ஸ்ரீராமிற்கு பதிலளித்த கங்கனா

கங்கனா ரனாவத் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டப் பதிவிற்கு தற்போது கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படத்தில் தன்னால் பணியாற்ற முடியாமல் போனது என்றும் அதனால் மனம் வருத்தமுற்ற நான் அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் கூறியபோது அதை ஏற்றுக்கொண்டார்கள் என்றும், கங்கனாவிற்கு தனது வாழ்த்துக்கள் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா உங்களைப் போன்ற கலைஞருடன் பணியாற்ற முடியாமல் போனது முழுக்க முழுக்க எனக்கான இழப்பு. ஆனால் என்னுடன் பணியாற்ற முடியாமல் போனதற்கு நீங்கள் வருத்தமுற்ற காரணம் குறித்து எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சரியான முடிவை எடுத்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் என்று பதிலளித்துள்ளார்.

இதனை பிசி ஸ்ரீராம் பாராட்டியுள்ளார்.