இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்! அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
173

இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்! அதிர்ச்சியில் திரையுலகம்!!

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி மரணமடைந்துள்ளார். அவர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 47.

2001 ஆம் ஆண்டு பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என்வீட்டு ஜன்னல் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல’ பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பில் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப்பின் 3 திரைப்படங்களுக்கு பவதாரிணி இசையமைத்து வந்தார்.

இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் மஸ்தானா…மஸ்தானா… படல் மூலம் பாடகியாக அறிமுகமானார். சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவும் தற்போது இலங்கையில் உள்ளார். ரேவதி இயக்கத்தில் ஷோபானா நடித்த மித்ர் மை ப்ரெண்ட் படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

ஒரு எழுத்துக்கூட ஆங்கில ம் கலக்காமல் தமிழில் எடுக்கப்பட்ட படம் இலக்கணம் இந்த படத்திற்க்கு இசைமைப்பாளராக பவதாரிணி அவர்கள் பணியாற்றினார்.

இந்த படத்தை மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் பார்த்து விட்டு வெளியே வந்து இசைமைப்பாளர் பவதாரிணி அவர்களை வெகுவாக பாரட்டினார்.

பவதாரிணி மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.