இறுதிகட்ட பணிகளில் “மென்பனி புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கும் ‘இன்ஃபினிட்டி’

0
155

இறுதிகட்ட பணிகளில் “மென்பனி புரொடக்‌ஷன்ஸ்” தயாரிக்கும் ‘இன்ஃபினிட்டி’

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், நட்டி @ நட்ராஜ் மற்றும் வித்யா பிரதீப் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வந்த இன்ஃபினிட்டி என்கிற மாறுபட்ட கதைகளம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

“மென்பனி புரொடக்‌ஷன்ஸ்” சார்பாக வை.மணிகண்டன், உ.பிரபு, கி.அற்புதராஜன் மற்றும் த.பாலபாஸ்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.என். ஃபாஸில் எடிட் மற்றும் டாம் ஜோவின் இசையும் கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஓர் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாகவும், சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கிய இக்கதை மருத்துவ துறையில் நடக்கும் கருப்பு பக்கங்களை தோலுரிப்பதாக அமையும் என படத்தின் இயக்குனர் சாய் கார்த்திக் ப்ரத்தியேகமாக கூறியுள்ளார்.

சென்னை மற்றும் ஈ.ஸி.ஆர் சுற்று வட்டார பகுதிகளில், தயாரிப்பாளர்களின் விடா முயற்சியால் 23 நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு வெகு வேகமாக கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இன்ஃபினிட்டி திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.