‘இராவண கோட்டம்’ டைட்டில் லுக்கை வெளியிட்டு ஷாந்தனுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்

0
369

‘இராவண கோட்டம்’ டைட்டில் லுக்கை வெளியிட்டு ஷாந்தனுவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்

2013-ம் ஆண்டு கதிர், கலையரசன், ஓவியா நடிப்பில் வெளியான மதயானைக் கூட்டம் படத்தை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ராவணக் கோட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாந்தனு, கயல் ஆனந்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

கண்ணன் ரவி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் பூஜையுடன் துவங்கிய இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தெரிகிறது. இதனிடையே ‘மாஸ்டர்’, ‘வானம் கொட்டட்டும்’, உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்தார் ஷாந்தனு.

ALSO READ:

Lokesh Kanagaraj reveals the title look poster of Shanthnu Bhagyaraj’s Raavana Kottam

இராவண கோட்டம் குறித்து ட்விட்டரில் நேற்று கருத்து பதிவிட்ட அவர், “படத்தின் கதை தட்ப வெப்பநிலையை பொறுத்தது என்றும் வருடத்தில் 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும். கொரோனா பிரச்னை முடிவடைந்து திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘இராவண கோட்டம்’ படத்தின் டைட்டில் லுக்கை இன்று வெளியிடுவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

அதன்படி ‘இராவண கோட்டம்’ படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், “இதுக்கு அப்பறோம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்” என்று ஷாந்தனுவை வாழ்த்தியுள்ளார். அத்துடன் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் உள்ளிட்ட படக்குழுவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.