இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ?

0
165

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோ?

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பரோட்டா சூரியாக வலம் வந்தவர் நடிகர் சூரி. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் காவலராக நடிக்கும் சூரியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

சிவகார்த்திகேயனின் ‘டான்’, கார்த்தியின் ‘விருமன்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்டப் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துவரும் சூரி, அமீர் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.