இயக்குநர் லிங்குசாமியின் RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

0
143

இயக்குநர் லிங்குசாமியின் RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa Silver Screen வழங்கும், RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது!

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும், RAPO19 படத்தின் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். இந்த படத்தின் ஆர்வமிகு திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து, திட்டமிடப்பட்ட காலத்தில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் முக்கிய கலைஞர்களுடன் நடிகர் ஆதி பினுஷெட்டி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகளை தயாரிப்பாளர்கள், விரைவில் வெளியிடவுள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில், கமர்ஷியல் படங்களின் வெற்றி நாயகனாக வலம் வரும், நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில், தற்போதைக்கு RAPO19 தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், தற்போதே விநியோக தளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வணிக ரீதியாக தொடர் வெற்றிப்படங்களை தரும் இயக்குநர் லிங்குசாமியுடன், நடிகர் ராம் பொத்தினேனி இணைந்துள்ளதால், இப்படம் ‘100% கமர்ஷியல் பிளாக்பஸ்டராக ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் லிங்குசாமி எப்பொழுதும் தெலுங்கு சினிமா சூப்பர்ஸ்டார்களுக்கு மிகவும் பிடித்தவர், தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள், இவருடன் இணைந்து படம் செய்ய, வெகு காலமாக ஆவலுடன் காத்திருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

இளம் தேவதை கீர்த்தி ஷெட்டி, அழகு நாயகி அக்‌ஷரா கௌடா ஆகியோருடன், பெரும் திறமையாளரான ஆதி பினுஷெட்டி இனைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசை படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.