இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

0
140

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

தேசிய விருது பெற்ற ‘இயற்கை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். ‘ஈ’, ‘பேராண்மை’ படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அண்மையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டு வந்தன.

மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன், தனது படைப்புகளில் இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசிவந்தவர். தனியாக வசித்து வந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர். இந்நிலையில் ஜனநாதன் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நடிகர்கள் ஜெயம் ரவி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.