இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உடன் புதிய படத்திற்காக கைகோர்க்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ் லஷ்மண் குமார்…

0
156

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் உடன் புதிய படத்திற்காக கைகோர்க்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ் லஷ்மண் குமார்…

தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் குமார் வலுவான கதை அம்சம் கொண்ட அதேசமயம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான “சர்தார்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் பட்டையைக் கிளப்பியது.

அதன் வெற்றியைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரித்து, சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்த “காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியாகி வெற்றி பெற்றது.,

இந்நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கமர்சியல் வெற்றியான “கொலைகாரன்” மற்றும் சமீபத்தில் வெளியான அமேசான் பிரைம் வெப் சீரிஸ் “வதந்தி” ஆகியவற்றை இயக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் ஆண்ட்ரூ லூயிஸ்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இருவரும் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.