இந்தியன்-2 படத்தில் நடிக்கும் கமல்ஹாசன் வயதான தோற்றம் வெளியானது

0
134

இந்தியன்-2 படத்தில் நடிக்கும் கமல்ஹாசன் வயதான தோற்றம் வெளியானது

கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி இந்தியன்-2 படத்தில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் வயதான தோற்ற போஸ்டரை டைரக்டர் ஷங்கர் நேற்று டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்த இந்தியன் படம் 1996ல் வெளியாகி வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் படத்தை தூக்கி நிறுத்தி இருந்தது. லஞ்சம், ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை வர்ம கலையால் கொலை செய்யும் கதாபாத்திரமாக அதை சித்தரித்து இருந்தனர். தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல். இரண்டாம் பாகத்தில் தாத்தா கதாபாத்திரத்தை மேலும் கொஞ்சம் வயதானவராக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து மாற்றினர். ஆனால் அந்த தோற்றத்தில் கமல்ஹாசனுக்கு திருப்தி இல்லாமல் போனதால் படப்பிடிப்பை சில மாதங்கள் நிறுத்தி வைத்து மேக்கப்பை இன்னும் மெருகேற்றி மாற்றி அமைத்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி இந்தியன்-2 படத்தில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் வயதான தோற்ற போஸ்டரை டைரக்டர் ஷங்கர் நேற்று டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டரை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.