ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய ‘ஜல்லிக்கட்டு’!

0
457

ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறிய ‘ஜல்லிக்கட்டு’!

ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஜல்லிக்கட்டு திரைப்படம் தேர்வு செய்யப்படவில்லை.

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப தேர்வானது. ஆஸ்கர் கிடைக்கிறதோ, இல்லையோ சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகியிருப்பதே மலையாள சினிமா உலகிற்குக் கிடைத்த ஒரு மகுடமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஜல்லிக்கட்டு தேர்வு செய்யப்படவில்லை. இந்தியா சார்பில் ஜல்லிக்கட்டு அனுப்பப்பட்ட நிலையில் இறுதிக்கு தேர்வான 15 படங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. வெளிநாட்டு படப்பிரிவில் இந்தியாவில் இருந்து எந்த படமும் ஆஸ்கர் போட்டியில் இடம்பெறவில்லை.

இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் உருவாகிய ’ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்துசமத் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்து இருந்தனர் என்பதும், இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 சர்வதேச திரைப்படங்களின் பட்டியல் இதோ: