ஆன்டி இந்தியன் விமர்சனம்: ஆன்டி இந்தியன் மரண அரசியல் கலந்த நெத்தியடி

0
146

ஆன்டி இந்தியன் விமர்சனம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் கதை, வசனம், திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார் பு@ சட்டை மாறன்.
இதில் ராதாரவி, நரேன், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், விஜயா மாமி, கர்ண ராஜா, சினேபா, இயக்குனர் வேலு பிரபாகரன், மகேஷ், கில்லிமாறன், அனில்குமார், ஷான், சார்லஸ் வினோத், விஜய் டிவி பாலா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோருடன் பு@ சட்டை மாறன் நடித்துள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-கதிரவன், எடிட்டர்-ஆர்.சுதர்சன், கலை-வீரமணி கணேசன், நடனம்-ரமேஷ், சண்டை-ஹரி தினேஷ், பிஆர்ஒ- ஜான்.

முஸ்லிம் தந்தைக்கும், இந்து தாய்க்கும் பிறந்தவரான அரசியல் சுவர் விளம்பர ஒவியரான பாட்ஷா (பு@ சட்டை மாறன்) சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார்.தாய் கிருத்துவராக மதம் மாறியிருப்பது அப்பொழுது தான் தெரிய வருகிறது. இருப்பினும் பாட்ஷாவின் உடலைப் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்பதால்; பள்ளிவாசலில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று உடலைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனிடையே இடைத்தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் நடைபெறுகிறது. மாறனின் இறப்பை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முற்படுகின்றனர். இதன் பிறகு மீண்டும் வீட்டுக்குத் திருப்பி எடுத்துச் செல்லப்படும் உடல் அரசியல்வாதி தலையீட்டால் இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்குக் கொண்டு செல்லப்படுகிறது.அங்கே இறந்தவரின் பெயர் பாட்ஷா என்றிருப்பதால் அடக்கம் செய்ய மறுத்து விடுகின்றனர்.மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் அவரத உடலை மூன்று  மதத்தினரில் யார் அடக்கம் செய்வது என்ற சர்ச்சை உருவாகிறது. இதனால் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. தேர்தல் சமயத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல்துறை முயற்சி செய்ய அனைத்தையும் தாண்டி பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? இடைத்தேர்தல் நடந்ததா? கட்சிகளின் மோதல்கள் ஒய்ந்ததா? என்பதே கதையின் முடிவு.

பாட்ஷாவாக மாறன் பிணமாக நடித்துள்ளார், இவரைச்சுற்றியே அனைத்து கதாபாத்திரங்களும் பின்னப்பட்;டிருப்பதால் கதையின் நாயகனாக விளங்கி எல்லோரும் படுத்துக்கொண்டே ஜெயித்தார் என்று சொல்வது போல் சடலமாக படுத்துக்கொண்டே நடித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.இதனால் விமர்சகர்களிடமிருந்து தப்பித்து விட்டார் என்பதே உண்மை.

இவருடன் ராதாரவி, நரேன், வழக்கு எண் முத்துராமன், ஏழுமலையாக ஜெயராஜ் தாய் மாமனாக நடிப்பில் அசத்தியுள்ளார். விஜயா மாமி, கர்ண ராஜா, சினேபா, இயக்குனர் வேலு பிரபாகரன், மகேஷ், கில்லிமாறன், அனில்குமார், ஷான், சார்லஸ் வினோத், சுரேஷ் சக்ரவர்த்தி என்று தேர்ந்த நடிகர்கள் படத்தில் இருப்பதால் படம் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளைக்கு முன் வரும் விஜய் டிவி பாலா ஒரிரு காட்சிகள் வந்தாலும் நகைச்சுவை கலந்த வசனத்தில் கை தட்டலுடன் சிரிப்பலைகளை வரவழைக்கிறார்.

கதிரவனின் ஒளிப்பதிவு அனைத்து காட்சிகளையும் அசத்தலுடன் கொடுத்துள்ளார்.

ஆர். சுதர்சனன் இரண்டாம் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் ஷார்ப்பாக இருந்திருக்கும்.

கானா பாடல்களும், பின்னணி இசையும் பு@சட்டை மாறனின் இசை படத்தின் காட்சிகளுக்கேற்ப கை கொடுத்துள்ளது.

கதை, வசனம், திரைக்கதை எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார் பு@ சட்டை மாறன்.ஒரு சடலத்தை வைத்துக் கொண்டு அல்லல்படும் உறவினர்கள், அவர்களை அலைக்கழிக்கும் மத அடிப்படைவாதிகள், காவல்துறை துணையோடு அரங்கேறும் அரசியல் நாடகங்கள், தேர்தலை நிறுத்த முற்படும் அரசியல் கட்சிகள், இதனால் எற்படும் மதக்கலவரங்கள், இறப்புகள் என்று அரசியல் நெடி கலந்த வசனங்களுடன் திரைக்கதை எழுதி அசத்தியுள்ளார் பு@ சட்டை மாறன். கொலை செய்தது யார்? என்ற கோணத்தில் கதை செல்லாமல் புதைப்பது யார் என்ற கோணத்தில் கதை நகர்த்திய விதம் அருமை. வெல்டன்.

மொத்தத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் ஆன்டி இந்தியன் மரண அரசியல் கலந்த நெத்தியடி.