அஷ்டகர்மா விமர்சனம்: தன் வினை தன்னைச்சுடும் என்பதை செய்வினை மூலம் நம்பும்படி சொல்லி பயமுறுத்தும் படம் அஷ்டகர்மா
மிஷ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் சி.எஸ்..பதம்சந்த், சி.எஸ்.அரிஹந்த் ராஜ் சி.எஸ்.கிஷன் இணைந்து தயாரித்திருக்கும் அஷ்டகர்மா படத்தை கதையை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் தமிழ்செல்வன்.
இதில் சி.எஸ்.கிஷன், ஷ்ரதா சிவதாஸ், நந்தினி ராய், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-முத்து கணேஷ். ஓளிப்பதிவு – குரு தேவ், கலை-கிஷோர், எடிட்டர்-மணிகுமரன், தயாரிப்பு நிர்வாகி-மாலிக், பிஆர்ஒ: சதீஷ் (AIM).
மாந்திரீகத்தில் நம்பிக்கையில்லாத மனோத்துவ நிபுணர் கிஷன். தொலைக்காட்சியில் விவாத மேடையில் பங்கு கொள்ள, மாந்தரீக நம்பிக்கையில்லாத இவரை மந்திரவாதி ஒருவர் சவால் விட்டு குறிப்பிட்ட ஒரு வீட்டில் தங்கும்படி சொல்கிறார். இதற்கு சம்மதிக்கும் கிஷன் அந்த வீட்டிற்கு செல்ல, அந்த வீட்டில் முன்னர் இருந்த குடும்பம் கிஷனிடம் தங்களுக்கு நேர்ந்த சோகங்கள், கஷ்டங்களை விவரித்து எச்சரிக்கின்றனர். கிஷன் அவர்களுக்கு உதவ முன்வர, அதன் பின் எடுக்கும் முயற்சியில் மாந்திரீகத்தில் நம்பிக்கை ஏற்பட காரணமாகிறது. ஃபிளாஸ்பேக்கில் அந்த குடும்பத்தில் மாந்திரீகத்தை தொழிலாக செய்து கொண்டிருக்கும் தந்தைக்கு பிறந்த இரண்டு பெண்கள். திருமணம் செய்து கொண்டு செல்லும் மூத்த பெண் தந்தையின் நடவடிக்கை பிடிக்காமல் தனியே சென்று விடுகிறார்.இளைய பெண்ணிற்கு திருமணம் நடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவராக இருக்கிறார். கணவரின் தங்கைக்கு குழந்தைகள் இருப்பதை கண்டு பொறாமை கொண்டு தந்தை மூலம் செய்வினை செய்து கணவரின் தங்கை குடும்பத்தை அழிக்கிறார். கர்ப்பிணி தங்கை இறக்கும் போது பிறக்கும் பெண் குழந்தையை இளைய பெண் எடுத்து வளர்க்கிறார். செய்வினை செய்திருப்பதால் அந்த குழந்தை மூலம் தீராத பிரச்னைகள் தலை தூக்குகிறது. இதுவே பல விபரீதங்களுக்கு காரணம் என்பதை கண்டுபிடிக்கும் கிஷன் எப்படி அந்த குடும்பத்தை காப்பாற்றினார்? செய்வினை செய்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழித்தாரா? அதன் பின்னரும் அந்த குடும்பம் செய்வினையால் பாதிப்பு உள்ளாகாமல் தப்பித்ததா? தொடர்கதையானதா? என்பதே க்ளைமேக்ஸ்.
சி.எஸ்.கிஷன் புதுமுகம் அறிமுகம் என்றாலும் நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்கிறார். இவருடன் ஷ்;ரதா சிவதாஸ், நந்தினி ராய், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர் பக்கபலமாக இருந்து திகில் கலந்த கதைக்கு உத்தரவாதம் தருகின்றனர்.
எல்.வி.முத்துகணேஷ் இசை படத்தில் பயமுறுத்தலுக்கு பஞ்சமல்லாமல் கொடுத்துள்ளார்.
ஆர்.பி.குருதேவ் திகில் காட்சிக்கோணங்கள், விவரீத சம்பவங்கள், முதல் காட்சியில் காட்டெருமைக்கு செய்யும் பூஜையிலிருந்து தொடங்கி படிப்படியாக காட்சிகளை விரிவுபடுத்து அசத்தலாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருப்பது தனித்துவம்.
மாந்திரீகம், செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை மையமாக வைத்து காமெடி செய்யாமல் சீரியஸான கதைக்களத்தை கொடுத்து, நம்ப முடியாதவர்களையும் நம்பிக்கை ஏற்படும்படி தன்னால் முடிந்த வரை த்ரில்லிங்காகவும், திகிலாகவும் கொடுத்து இயக்கியுள்ளார் விஜய் தமிழ்செல்வன். இந்து மதங்களில் செய்வினை குறிப்புகளை குறிப்பிட்டு அதனால் வசியம், குடும்பத்தையே அழிப்பது போன்ற செயல்களை செய்ய முடியும் என்றும், சிலவற்றை அழிக்க முடியாது செய்தவர்களுக்கு திருப்பி விடத்தான் முடியும் என்பதை காட்சிகள் மூலம் சொல்லியிருப்பது சிறப்பு.
மொத்தத்தில் மிஷ்ரி என்டர்பிரைசஸ் சார்பில் சி.எஸ்.பதம்சந்த், சி.எஸ்.அரிஹந்த் ராஜ் சி.எஸ்.கிஷன் இணைந்து தயாரித்திருக்கும் அஷ்டகர்மா தன் வினை தன்னைச்சுடும் என்பதை செய்வினை மூலம் நம்பும்படி சொல்லி பயமுறுத்தியுள்ளார்.