அழுத்தமான கதாபாத்திரம் : 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா

0
138

அழுத்தமான கதாபாத்திரம் :

60 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் திரிஷ்யம்-2 ரீமேக்கில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் பூர்ணா, அடுத்ததாக அகந்தா எனும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு (வயது 60) ஜோடியாக நடிக்க உள்ளாராம். படத்தில் இவருக்கு ஐபிஎஸ் அதிகாரி வேடமாம். அழுத்தமான கதாபாத்திரம் என்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். மேலும் இப்படம் தனக்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று நம்புகிறாராம் பூர்ணா.