அர்ப்பணிப்பும் திறமையும் ஒருங்கே பெற்ற நாயகன் வருண்!

0
177

அர்ப்பணிப்பும் திறமையும் ஒருங்கே பெற்ற நாயகன் வருண்!

எளிதாக சினிமாவில் நடிகராக மலர்ந்தவரல்ல நடிகர் வருண். அவரது பயணம் படிப்படியானது. நடிகர் வருண் உடைய தாத்தா புகழ்பெற்ற நடிகர் ஐசரி வேலன் மற்றும் அவரது மாமா சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான டாக்டர். ஐசரி K கணேஷ். இருவரிடமிருந்தும் சினிமாவின் பாரம்பரிய ஞானத்தைப் பெற்ற திறமையான நடிகர் வருண், அவர் ஒரே இரவில் சினிமாவில் நாயகனாக முயற்சிக்கவில்லை. திரைப்படங்களில் குரூப் டான்சராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்( விஜய் உடைய தலைவா படத்தில் அவரது முகம் நன்றாக அறியப்பட்டது). தீராத ஆர்வம், இடைவிடாத உழைப்பு, எல்லாவற்றையும் விட நேர்மறை எண்ணம் அவரை மேலும் அழகுபடுத்தியது. சிறிய வேடங்களில் கூட அவரது அர்ப்பணிப்பு, அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருந்தது, இறுதியாக, ‘பப்பி’ என்ற படத்தில் முக்கிய பாத்திரத்திரமாக நாயகனாக ரசிகர்கள் பேராதாரவுடன் நாயகனாக அவர் திரையில் அறிமுகமானார். ‘ஜோஷுவா’ திரைப்படம் மூலம் அதிரடியான ஆக்‌ஷன் ஹீரோவாக அவரது அவதாரம் அவரை தமிழ் சினிமாவில் அனைவரிடத்திலும் மிகவும் விரும்பத்தக்க நடிகராக மாற்றியுள்ளது. தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் வருண், ரியாலிட்டி டிவி ஷோவில் Mr. Positive-ஆக இருப்பதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் பையனாக மாறிவிட்டார்.

ஜோஷுவா திரைப்படம் உலகமெங்கிலும் வெளியாக தயாராகிகொண்டிருக்கிறது, மேலும் அடுத்ததாக வருண் மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.