அரண்மனை 3 விமர்சனம் : அனைவரையும் மிரட்டும் உறுதியான பிரம்மாண்ட கல்தூண்

0
162

அரண்மனை 3 விமர்சனம் : அனைவரையும் மிரட்டும் உறுதியான பிரம்மாண்ட கல்தூண்

ஆவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவீஸ் வெளியீட்டில் வந்துள்ள படம் அரண்மனை 3.

இதில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்டிரியா, சாக்ஷி அகர்வால், சம்பத், விவேக், யோகிபாபு, மனோபாலா, வேலா ராமமூர்த்தி, மது சூதன் ராவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், குழந்தை ஓவி பந்தார்கர், நளினி, மைனா நந்தினி, சிறப்பு தோற்றத்தில் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகியோர் நடிக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை-வெங்கட் ராகவன், ஒளிப்பதிவு-யு.கே.செந்தில்குமார், இசை-சத்யா.சி, எடிட்டர்-பென்னி ஒலிவர், சண்டை-பீட்டர் ஹேயின், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்,கலை-குருராஜ், நடனம்-பிருந்தா தினேஷ், வசனம்-பத்ரி, பிஆர்ஒ- ரியாஸ், ஏய்ம் சதீஷ்.

பி;ரம்மாண்ட அரண்மனையில் ஜமீன்தார் சம்பத் தன் மகள் மற்றும் உறவினர்களுடன் வசிக்கிறார். அந்த பங்களாவில் பேய் இருப்பதாக மகள் அடிக்கடி சம்பதிடம் சொல்ல,  சிறு வயதிலேயே மகளை ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கிறார்.பல வருடங்களுக்கு பிறகு மகள் ராஷி கண்ணா அரண்மனைக்கு திரும்ப, மீண்டும் பேய் நடமாட்டத்தை உணர்கிறார். ராஷி கண்ணாவின் அத்தையின் மருமகன் சுந்திர்.சியின் மகளுக்கும் இந்த உணர்வு ஏற்படுகிறது. சுந்தர்.சி தன் மகளை பார்க்க அரண்மனைக்கு வர, ஆமானுஷ்ய சக்தியை உணர்ந்து தன் மகளை காப்பாற்ற நினைக்கிறார். அதன் பின் கொல்ல நினைப்பது தன் மகளை அல்ல ராஷி கண்ணாவைத்தான் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார்.இதற்கான காரணத்தை கண்டுபிடித்து ராஷி கண்ணாவை காப்பாற்றினாரா? எதனால் இந்த பழி வாங்குதல் தொடர்கிறது? மர்மமான கொலை மற்றும் பின்னனி என்ன? என்பதே மிரட்டும் மீதிக்கதை.

கதாநாயகன் ஆர்யா இல்லை சுந்தர்.சி தான், முக்கிய கதாபாத்திரத்தில் பேயின் மர்மத்தை கண்டுபிடித்து காப்பாற்றும்  முக்கிய பொறுப்பு அதை தன் ஸ்டைலில் அமைதியாக செய்து முடித்து பேர் வாங்கி சென்று விடுகிறார்.

ராஷி கண்ணா கவர்ச்சியான மெழுகு பொம்மை போல் சொன்ன வேலையை செய்து விட்டு போகிறார்.

ஆண்ட்டிரியா பிளாஷ்பேக் காட்சிகளுடன் என்ட்ரி கொடுத்து, இறுதி வரை உறுதியான துரத்தல் பேயாக கெத்து காட்டியுள்ளார்.

சாக்ஷி அகர்வால், சம்பத், விவேக், யோகிபாபு, மனோபாலா, வேலா ராமமூர்த்தி, மது சூதன் ராவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், குழந்தை ஓவி பந்தார்கர், நளினி, மைனா நந்தினி ஏகப்பட்ட துணை பாத்திரங்கள் மற்றும் நகைச்சுவைக்காக பலர் படத்தில் நிறைந்துள்ளனர்.

அரண்மனை வீடு, காட்டுப்பகுதி, பிளாஷ்பேக் காட்சிகள், சிஜி காட்சிகள், பிரம்மாணட சாமி சிலை, மலைக்கோயில், மலையில் ஏற்றும் தீப விளக்கு, கோயில், ரகசிய அறை என்று தன் யதார்த்தமான, மிரட்டலான காட்சிகளில் தனி முத்திரை பதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.

சத்யா.சியின் ஆர்ப்பாட்டமான இசை பாடல்களில் தெறிக்க விட, பின்னணி இசையும் படம் முழுவதும் ஒலிக்கும் செங்காந்தலே பாடல் அருமை.

எடிட்டர்-பென்னி ஒலிவர், சண்டை-பீட்டர் ஹேயின், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்,கலை-குருராஜ் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் பிரம்மாண்டத்தையும், விறுவிறுப்பையும் எகிறச்செய்கிறது.

சுந்தர்.சியின் அக்மார்க் அரண்மனை கதைகள் அவரின் இயக்கும் தன்மைக்கேற்ப பல நேரங்களில் வெற்றிக்கு கை கொடுத்துள்ளது. இதில் அரண்மனை 3ம் பாகத்தில் மூன்று பேய்கள், பழி வாங்க துடிக்கும் துரத்துலகள்;, ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், நகைச்சுவை, ப்ளாஷ்பேக் கதை, இறுதியில் இதிலிருந்து மீட்கும் ஹீரோயிசம் நிறைந்த கதைக்களம் எப்போழுதும் சுவாரஸ்யமாக இயக்குவதில் வல்லமை கொண்ட இயக்குனர் சுந்தர்.சி இதில் வசூல் வேட்டையில் வெற்றியும் வெற்றிருக்கிறார். ஒரே மாதிரியான பேய் கதைகளை வித்தியாசப்படுத்தி கதைக்களம் காட்டுவது என்பது மிகச்சிரமம், அடுத்தது என்ன நடக்கும் என்று தெரிந்தும் அதை த்ரில்லிங்காகவும், திகிலாகவும் காட்சிகளை அமைத்து அப்ளாஸ் வாங்கி விடுகிறார் இயக்குனர் சுந்தர்.சி.

மொத்தத்தில் ஆவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவீஸ் வெளியீட்டில் வந்துள்ள அரண்மனை 3 அனைவரையும் மிரட்டும் உறுதியான பிரம்மாண்ட கல்தூண்.