அம்மாவாகப் போகும் சோனம்

0
64

அம்மாவாகப் போகும் சோனம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சோனம் கபூர் தாயாகப் போகிறார். இதை அவர் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னணி நடிகர் அனில் கபூரின் மகளாக அறிமுகமானவர் சோனம் கபூர். ‘ஆயிஷா’, ‘ராஞ்சனா’, ‘பிரேம் ரத்தன் தன் பாயோ’ மற்றும் ‘நீர்ஜா’ போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்றார். அவர் 2018 இல் தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை மணந்தார். கல்யாணத்துக்குப் பிறகு படங்களின் வேகத்தைக் குறைத்துவிட்டார் ஹீரோயின்.

கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சோனம், தனக்கு குழந்தை பிறக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சோனம், ‘உன்னை பெரிய குழந்தையாக வளர்ப்போம். ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களுக்கு உதவுவோம். நீங்கள் விரும்புவதை ஒத்துழைக்க போதுமான அன்பை ஊற்றுவோம். உங்களைப் பார்ப்பதற்கும் உங்களை வரவேற்பதற்கும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.