அனிருத் இசையில் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணையும் காதல் படம்

0
84

அனிருத் இசையில் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணையும் காதல் படம்

நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப்பிறகு தீவிரமாக படங்களில் கவனம் செலுத்திவரும் சமந்தா ‘யசோதா’, ‘சகுந்தலம்’, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப் படம் உள்ளிட்டவற்றில் அதிகாரபூர்வமாக நடித்து வருகிறார். அதோடு, நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சமந்தா விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தை தயாரித்த ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு நாக சைதன்யா – சமந்தா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘மஜிலி’ படத்தை இயக்கிய சிவ நிர்வாணா இயக்குகிறார்.

கீர்த்தி சுரேஷின் ’மகாநடி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சமந்தா- விஜய் தேவரகொண்டா இப்படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் ‘லைகர்’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.