அண்ணாத்த படப்பிடிப்பு: விரைவில் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

0
294

அண்ணாத்த படப்பிடிப்பு: விரைவில் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு, கொரோனாவால் படக்குழுவினர் பாதிப்பு என பல தடைகளை கடந்து நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பை மே 10-ம் தேதிக்குள் முடிக்கவுள்ளனர். அதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரிரு நாட்களில் படமாக்கப்பட்டுவிடும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் இந்த வார இறுதியில் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.  அதனைத் தொடர்ந்து, சென்னையில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசுகிறார் ரஜினி. அந்த வேலை முடிந்த பின், ஜுனில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

அண்ணாத்த படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ள நிலையில் படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.