அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட பா.இரஞ்சித்

0
193

அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட பா.இரஞ்சித்

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன.

இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘ரைட்டர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார். பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.