அடுத்தடுத்து வெளியாகும் சூர்யா படங்கள் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
414

அடுத்தடுத்து வெளியாகும் சூர்யா படங்கள் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யாவின் நடிப்பில் கடந்த வருடம் சூரரைபோற்று வெளியாகி வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ஆஸ்கார் போட்டிக்கும் சென்று வந்தது. இதையடுத்து தற்போது 3 படங்கள் சூர்யா கைவசம் உள்ளன. இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த நிலையில் கொரோனாவால் நிறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

இதையடுத்து கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா. இந்த படங்களை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் சூர்யா படவேலைகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே வெற்றிமாறனுடன் சூர்யா இணையும் வாடிவாசல் படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.