அஜித் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் பிரபல நடிகர்

0
181

அஜித் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் பிரபல நடிகர்

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கொரோனா பரவலால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் நடித்த ஆசை மற்றும் பரமசிவன் படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.