UGET 2022 க்கான COMEDK- Uni-GAUGE நுழைவுத் தேர்வு: விண்ணப்ப தேதிகள் அறிவிக்கப்பட்டன

0
90

UGET 2022 க்கான COMEDK- Uni-GAUGE நுழைவுத் தேர்வு: விண்ணப்ப தேதிகள் அறிவிக்கப்பட்டன

400 மையங்களில் 80000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை, COMEDK UGET மற்றும் Uni-GAUGE நுழைவுத் தேர்வுகள் முறையே 150-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மற்றும் 50+ புகழ்பெற்ற தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த தேர்வாக ஜூன் 19, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். கர்நாடக நிபுணத்துவ கல்லூரிகள் அறக்கட்டளை மற்றும் Uni-GAUGE உறுப்பினர் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கல்லூரிகளுக்கான பி.இ/ பி.டெக் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இந்தியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் 400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களுடன் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, 80,000 மாணவர்கள் தேர்வெழுதுவார்கள் என எதிர்பார்க்கிறது.

விண்ணப்பதாரர்கள் www.comedk.org அல்லது www.unigauge.com இல் பதிவு செய்யலாம். விண்ணப்ப செயல்முறை 14 மார்ச் 2022 முதல் 02 மே 2022 வரை ஆன்லைனில் திறந்திருக்கும்

விழாவில், COMEDK நிர்வாக செயலர் டாக்டர் குமார் பேசுகையில், “கர்நாடகம் கடந்த 50 வருடங்களாக உயர்கல்விக்கான மையமாக உள்ளது. கல்லூரிகளின் தேர்வு, கல்வியின் தரம் மற்றும் படிப்பு முடிந்த பிறகு அதிக வேலைவாய்ப்பு ஆகிய காரணங்களால் பொறியியல் ஆர்வலர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், கர்நாடகாவிற்கு வெளியில் இருந்தும், உள்ளூர் கர்நாடகா மாணவர்களிடமிருந்தும் நுழைவுத் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிக உயர்வை கண்டோம். நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படுவதால், இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். COMEDK, கடந்த 15 முறை தேர்வை தேசிய அளவில் சுமூகமாக நடத்துவதற்கு உதவுகிறது. இந்த ஆண்டும் தேர்வு மற்றும் சேர்க்கை நடத்தும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்வோம்.

அவர் மேலும் கூறுகையில், “NEP 2020 க்கு ஏற்ப, பொறியியல் மாணவர்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பற்றி புதுப்பித்த நிலையில் இருக்க Comedkares, மேம்பட்ட திறன் மையங்களையும் நாங்கள் தொடங்கினோம். அடுத்த தலைமுறையை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்காக திறன் மற்றும் இடைநிலை கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது. பல நிறுவனங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நிறுவனங்களில் நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வகங்கள் இல்லை. எனவே திறன் மையங்கள் COMEDK இன் அனைத்து உறுப்பினர் நிறுவனங்களிலும் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இந்த இடைவெளியை குறைக்கும்.

கர்நாடகம் முழுவதும் பின்வரும் இடங்களில் (கல்புர்கி, தார்வாட், பெலகாவி, ஷிவமொக்கா, ஹாசன், மைசூர், தக்ஷிண கன்னடா மற்றும் பெங்களூர்) 8 மேம்படுத்தப்பட்ட திறன் மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம், மேலும் ஒவ்வொரு திறன் ஆய்வகமும் 10 முதல் 12 உறுப்பினர் நிறுவனங்களை ஆதரிக்கும். இந்த திறன் ஆய்வகங்கள் விரைவான முன்மாதிரி கருவிகளின் பயன்பாடு, இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் அவற்றில் புதுமையான மனநிலையை வளர்ப்பதில் கவனம் செலுத்தும். இவ்வாறு தொழில்துறை தொடர்புடைய வெளிப்பாட்டை உருவாக்குவதன் மூலம், மாணவர்கள் வேலைக்கு தயாராக இருப்பதை உறுதிசெய்து தொழில் முனைவோர் வாழ்க்கைக்கான பாதையை அவர்களுக்கு வழங்கும்.

150+ கல்வி நிறுவனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் ComedK – Uni – GAUGE மதிப்பெண்களை ஏற்றுக்கொண்டதால் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய மல்டி பல்கலைக்கழக தனியார் பொறியியல் தேர்வாக மாறியுள்ளது. 150 நகரங்கள் மற்றும் 400 தேர்வு மையங்களை அடையும் வகையில், இது பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வேகத்தை பெற்றுள்ளது.

“GRE ஒரே தளமாக இருப்பதை போலவே, Uni-GAUGE என்பது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே தேர்வை வழங்குவதற்கான எங்கள் முயற்சியாகும். மாணவர்கள் வசதியாக தேர்வுகளை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான சூழலை வழங்க நாங்கள் எப்போதும் பாடுபட்டு வருகிறோம். தொற்றுநோய் நிலைமைகள் இருந்தபோதிலும், நாங்கள் 400-க்கும் மேற்பட்ட மையங்களில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி தேர்வை நடத்தினோம் என்று ERA அறக்கட்டளையின் சி.இ.ஓ பி.முரளிதர் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்யும் அதே வேளையில், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு இடமளிப்பதை இலக்காக கொண்டுள்ளோம். நாங்கள் 2 அமர்வுகளில் தேர்வை நடத்துவோம், ஒன்று காலை 09:00 மணிக்கு தொடங்கி மதியம் 12:00 மணிக்கு முடிவடையும். மற்றொன்று மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 வரை.”

இதற்கான விண்ணப்பம் மற்றும் தேர்வு செயல்முறை ஆன்லைனில் இருக்கும். www.comedk.org அல்லது www.unigauge.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் தேர்வு மற்றும் விண்ணப்ப செயல்முறை குறித்த விரிவான செயல்முறை வழிகாட்டுதல் மாணவர்களுக்கு கிடைக்கிறது.

குறிப்பு: www.comedk.org என்பது COMEDK இன் ஒரே அதிகாரப்பூர்வ இணையதளம். மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், தகவல் புதுப்பிப்புகள் மற்றும் விண்ணப்ப செயல்முறைக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.