SICA (SOUTH INDIAN CHEF ASSO.) நடத்திய சமையல் நிபுணர்களுக்கான Quizbites 2.0 நிகழ்ச்சியில் திருப்பதி, ICI BBAவை சேர்ந்த ரிஷிதா மற்றும் அனுஷா ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.
சமையல் கலைஞர்களுக்காக பிரத்யேக சமையல் வினாடி வினா, (QuizBites) குவிஸ்பைட்ஸ் 2.0 சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி சென்ட்ரில் நடைபெற்றது.
சவுத் இந்தியன் செஃப் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 120 சமையல் வல்லுனர்கள் கலந்து கொண்டனர். அணிக்கு இருவர் வீதம் 60 அணிகள் சுவையுணவுக்கலை அறிவு மற்றும் திறமையை இந்த வினாடி வினா போட்டியில் வெளிப்படுத்தினர்.
பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த போட்டியை SICA வின் தலைவரும், பிரபலமான சமையல் கலை வல்லுனருமான செஃப் தாமு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் SICA இன் பொதுச் செயலாளர் செஃப் சீதாராம் பிரசாத், இஸ்பஹானி மையத்தின் இயக்குநர் திரு. கேசன், நிகழ்ச்சிக்கான டைட்டில் ஸ்பான்சர் அஞ்சலி ஆயில்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் செந்தில் மற்றும் சென்னைஸ் அமிர்தா சிஇஓ பூமிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

திருப்பதியை சேர்ந்த ICI BBA வின் ரிஷிதா, அனுஷா ஜோடி 95 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றது. 90 புள்ளிகளைப் பெற்ற ஹைதராபாத் கலினரி அகாடமி இரண்டாம் இடத்தையும், திருப்பதி ICI MBA 80 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இந்த குவிஸ்பைட்ஸ் 2.O வினாடி வினா சமையல் கலையின் சிறப்பைக் கொண்டாடியது மட்டுமல்லாமல், சமையல் கலைஞர்கள் ஒருவரையொருவர் புரிந்து, ஒத்துழைக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தளமாகவும் செயல்பட்டது,