REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்க விழா முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  ஸ்ரீகாந்த் மற்றும்  மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற உள்ளது

0
148
REFEX குழுமம் வழங்கும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட்டின் தொடக்க விழா முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  ஸ்ரீகாந்த் மற்றும்  மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயின் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் நடத்தும் JITO பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் போட்டி  மார்ச் 6 ஆம் தொடங்கி  9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு சென்னை தாஜ் கன்னிமரா நட்சத்திர விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
சென்னையில்  அமீர் மஹால் மற்றும் மெரினா மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டிகள் கிழக்கு மண்டலம், குஜராத் மண்டலம், KKG (கேரளா, கர்நாடகா மற்றும் கோவா) மண்டலம், மும்பை சந்தன் ஆர்மர், வடக்கு மண்டலம், ROM (Rest of Maharashtra)  மண்டலம், TNAPTS மண்டலம் மற்றும் ராஜஸ்தான் மண்டலம் ஆகிய தேசிய அளவிலான எட்டு அணிகள் மோதுகின்றன.
ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ள இந்த போட்டிகளின் தொடக்கவிழாவில் 1983 ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும்  மொஹிந்தர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற உள்ளது.
சென்னையில் ஜிடோ பிரீமியர் லீக் 2024 ஐ நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும்,  இந்தப் போட்டி கிரிக்கெட் பற்றியது மட்டுமல்லாமல்,  விளையாட்டுத் திறன் மற்றும் ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை ஒன்றிணைக்க நடத்தப்படுகிறது என்றும் JITO அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
JITO சென்னை சேப்டர் ஜெயின் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் வணிகம், நெட்வொர்க்கிங் மற்றும் சமூக சேவையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு  அமைப்பாகும். அதன் உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் பலனளிக்கும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் முன்முயற்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த அமைப்பின் தலைவர் ரமேஷ் துகர்  மற்றும் செயலாளர் நேஹல் ஷா ஆகியோர் போட்டியை நடத்த உதவுபவர்கள் மற்றும்  ஜிதேந்தர் தோஷி விளையாட்டுக் குழுவினருடன்  சென்னையில் JPL போட்டியை நடத்து பெருமையாக உள்ளது என தெரிவித்து உள்ளனர்.