Radisson Blu GRT மற்றும் Page 3 (Spa) இணைந்து பிரம்மாண்டமாக நடைபெற்ற 12ம் ஆண்டு IRIS Face of chennai 2023

0
147
Radisson Blu GRT மற்றும் Page 3 (Spa) இணைந்து பிரம்மாண்டமாக நடைபெற்ற 12ம் ஆண்டு IRIS Face of chennai 2023 ஆண்டுக்கான அழகுப்  போட்டியில் Mr IRIS Face Of Chennai பட்டத்தை மணிகண்டன்…Ms IRIS Face Of Chennai பட்டத்தை நிஹாரிகா… Mrs IRIS Face Of Chennai பட்டத்தை துருத்தினா ஆகியோர் வென்றனர்
12ம் ஆண்டு Face of chennai  2023 அழகுப் போட்டி சென்னை  மீனம்பாக்கத்தில் உள்ள Radisson blu GRT சென்னை நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
IRIS Face of chennai 2023 அழகுப் போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரையிலான  ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர் அதேபோல் 50 வயதிற்கு உட்பட்ட திருமணமான பெண்கள்  கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற இந்த அழகு போட்டியில் 14 ஆண்கள் மற்றும் திருமணமான பெண்கள் பிரிவில் 7 பேரும் இளம் பெண்கள் பிரிவில் 11  பேரும் கலந்து கொண்டனர்.
 முன்னதாக 500 பேர் face of chennai 2023 நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஆடிஷனில் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் 50 பேர் இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 32 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.
 இறுதியில் போட்டியில் பங்கேற்ற அனைவரும் ஒய்யாரமாக நடைபோட்டனர்.இவர்கள்  அனைவரும் ராம்ப்வாக், ஸ்டைலிங், கம்யூனிகேஷன்  உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிலையில் இவர்களில் சிறப்பாக செயல்பட்ட  திருமணமான பெண்கள் பிரிவில் Mrs IRIS Face Of Chennai பட்டத்தை துருத்தினா ,இளம்பெண்கள் பிரிவில் Ms IRIS Face Of Chennai பட்டத்தை நிஹாரிகா, ஆண்கள் பிரிவில் Mr IRIS Face Of Chennai பட்டத்தை மணிகண்டன் உள்ளிட்டோர் IRIS Face of chennai 2023 ஆண்டின்  வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
 இந்த அழகு போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக  ராப்பர், பாடகர் மற்றும் நடிகை Ms.Iykki Berryநடிகை, மாடல் & ஒப்பனை கலைஞர் திருமதி சோபியாநடிகை, மாடல், பாடகி & தொகுப்பாளர் திருமதி.சுஜாதா பஞ்சு*நடிகை சனம் ஷெட்டி நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், மாடல் நடிகர் சஞ்சய் அஸ்ரானி,நீலிமா இசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 மூன்றாவது அமர்வின் சிறப்பு விருந்தினர்களாக  திரு C.K. குமாரவேல்   ( Founder Page 3 ) டாக்டர் கமலா செல்வராஜ், திரு விக்ரம் கோட்டா (COO GRT Group of Hotels ) டாக்டர் லதா ஏ கிருஷ்ணா ( CEO IRIS Events) உள்ளிட்ட  பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் இந்த  IRIS Face Of Chennai  அழகுப்  போட்டியில் கலந்து கொண்டு  வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர்.