Opensignal அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 4G அனுபவத்திற்கான முன்னணி வழங்குநராக Vi நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது
• 4G லைவ் வீடியோ, வீடியோ, கேம்ஸ், குரல் மற்றும் 4G பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகம் ஆகியவை முழுவதிலும் விதிவிலக்கான 4G அனுபவத்துடன் தமிழகத்தில் Vi பிரகாசிக்கிறது.
• 3200 க்கும் மேற்பட்ட தளங்களில் திறன் அதிகரிப்பு உள்ளிட்ட நெட்வொர்க் மேம்படுத்தல்கள் பயனர்களின் நெட்வொர்க் அனுபவத்தையும் இணைய வேகத்தையும் உயர்த்தியள்ளன.
முன்னணி தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆன வோடபோன் ஐடியா (Vi), 4G பயனர்களின் 4G அனுபவத்தை ஆய்வு செய்கிற Opensignal இன் 4G நெட்வொர்க் எக்ஸ்பீரியன்ஸ் ரிப்போர்ட் நவம்பர் 2024* இல் சுட்டிக்காட்டியுள்ளபடி தமிழ்நாட்டில் 4G நெட்வொர்க் அனுபவத்திற்கான தனது எண்ணற்ற வெற்றிகளுக்காகப் பாராட்டப்பட்டுள்ளதை இன்று பகிர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் Vi இன் குறிப்பிடத்தக்க நெட்வொர்க் விரிவாக்கம், அதன் பயனர்களுக்கு மிகச் சிறந்த டிஜிட்டல் அனுபவங்கள் மற்றும் இணைப்பை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை முக்கியப்படுத்திக்காட்டுகிறது.
Opensignal அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் அனைத்து வகைகள் முழுவதிலும் சிறந்த செயல்திறன் கொண்டதாக தரவரிசைப்படுத்துகின்ற வகையில், 4G லைவ் வீடியோ, 4G வீடியோ, 4G கேமிங், 4G வாய்ஸ் & 4G பதிவிறக்க & பதிவேற்ற வேகங்கள் உள்ளிட்ட சிறந்த 4G அனுபவத்தை வழங்குவதற்காக Vi அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Open signal அறிக்கையின் இந்த கண்டுபிடிப்புகள், தமிழ்நாடு முழுவதும் நெட்வொர்க் செயல்திறனை மேம்படுத்துவதில் Vi இன் தொடர்ச்சியான கவனத்தின் விளைவாக வந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏப்ரல் மாதத்தில், FPO மூலம் Vi , ரூபாய் 18,000 கோடியை வெற்றிகரமாக திரட்டியது மற்றும் நாடு முழுவதும் அதன் 4Gnetwork ஐ விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் இந்த நிதியைப் பயன்படுத்த உறுதியளித்தது.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் 95% மக்களை உள்ளடக்குகின்ற இன்னும் சிறந்த நெட்வொர்க் கவரேஜ் மற்றும் வேகமான இணைய வேகத்தை உறுதிசெய்கின்ற வகையில் 3200 க்கும் மேற்பட்ட தளங்களில் நெட்வொர்க் திறனின் அதிக அடுக்குகளை சேர்ப்பதன் மூலம் Vi தனது 4G திறனை அதிகரித்தது. இந்த முன்னேற்றங்கள், Vi GIGAnet நெட்வொர்க்கில் ஒரு தடையற்ற மற்றும் சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கிளஸ்டர் பிசினஸ் தலைவர் R.S. சாந்தாராம் கருத்து தெரிவிக்கையில், “தமிழகத்தில் எங்களின் சிறப்பான சாதனைக்காக அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நெட்வொர்க்கை வலுப்படுத்துகின்றதிலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்கின்றதிலும் எங்களின் தொடர்ச்சியான முதலீடுகளை இந்த சாதனை பிரதிபலிக்கிறது. இணைப்பில் சிறந்ததை வழங்குவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”என்று கூறினார்.
Vi, தொடர்ந்து தனது வாடிக்கையாளர் வழங்கல்களை மேம்படுத்தவும், மிகச் சிறந்த டிஜிட்டல் அனுபவங்களை வழங்கவும் முயற்சிக்கிறது. தற்போதைய நெட்வொர்க் தரமுயர்த்துதல்கள், மேம்படுத்தப்பட்ட சேவைத் தரம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு புதுமையான முயற்சிகள் மூலம், Vi தனது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அர்ப்பணித்துள்ளது.
அதன் சமீபத்திய வழங்கல்களில் சில :
Vi SuperHero ரீசார்ஜ்: Vi வாடிக்கையாளர்கள் தினமும் 12AM முதல் 12PM வரை வரம்பற்ற டேட்டாவை, வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் போன்ற பிரத்தியேக பலன்களுடன் அரை நாளுக்கு அனுபவிக்க முடியும்.
o ஒரு அரை நாளுக்கு தினமும் 12 மணி முதல் 12 மணி வரை வரம்பற்ற அதிவேக டேட்டா.
o வார இறுதி டேட்டா ரோல்ஓவர்: பயன்படுத்தப்படாத வார நாள் தரவை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், வார இறுதியில் அதைப் பயன்படுத்தவும் பயனர்களை அனுமதிக்கிறது.
o டேட்டா டிலைட்: 2ஜிபி வரை கூடுதல் டேட்டா/மாதம், அவர்களின் தினசரி டேட்டா ஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதல் செலவில்லாமல் வழங்குகிறது.
குறிப்புகள்:
* Opensignal – India 4G Network Experience Report அடிப்படையில்: நவம்பர் 2024 1 ஜூன் முதல் 29 ஆகஸ்ட் 2024 வரை 4G பயனர்கள் பதிவு செய்துள்ள 4G பயனர்களின் மொபைல் அளவீடுகளின் சுயாதீன பகுப்பாய்வு © 2024 Open Signal Limited.