AIAASC எனப்படும் அமெரிக்க சர்வதேச பள்ளி, கல்லூரிகள் அங்கீகார சங்கம், WASC எனப்படும் மேற்கத்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கம் ஆகியவை இந்தியாவில் இயங்கும் சர்வதேச கல்வி நிலையங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் நோக்கில் கூட்டு முயற்சியை தொடங்கியுள்ளன.
சென்னை பெருங்குடியில் உள்ள அமெரிக்கன் வேர்ல்டு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் AIAASC யின் Executive Director கிறிஸ்டோபர் சான், Board of Director டாக்டர்.மோகன லட்சுமி, Board of Advisors டாக்டர் சரண்யா ஜெயக்குமார், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முஹம்மது ஆசிப் அலி மற்றும் பென்சாகிர் பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, AIAASC Board of Director டாக்டர்.மோகன லட்சுமி , இந்தியாவில் பல கல்வி நிலையங்கள் சர்வதேச பள்ளி என்னும் பெயரில் அங்கீகாரம் பெறாமல் இயங்குகின்றன என்றும், இதனால் அங்கு பயிலும் மாணவர்களுக்கு அயல் நாட்டு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். அதனை முறைப்படுத்தி அங்கீகாரம் வழங்கவே AIAASC மற்றும் WASC அமைப்புகள் இணைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாரிய ஆலோசகர் டாக்டர் சரண்யா ஜெயக்குமார், அமெரிக்காவில் கல்வி நிலையங்களுக்கு தரச் சான்று வழங்கும் முக்கிய அமைப்புகளில் ஒன்று WASC என குறிப்பிட்டார். இவ்விரு அமைப்புகளும் இணைந்து இந்தியாவில் சர்வதேச கல்வி நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குவதோடு, 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை தணிக்கையிலும் ஈடுபட்டு அங்கீகாரம் வழங்குவதாக கூறினார். இதனால் மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
AIAASC இன் செயல் இயக்குனர் கிறிஸ்டோபர் சான் தெரிவிக்கையில், மாணவர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்புகளை மேம்படுத்த இந்த அமைப்புகள் இணைந்துள்ளன என்றார். மாணவர்கள் மன அழுத்தம் இன்றி தங்கள் கனவுகளை அடைய மேம்படுத்தப்பட்ட கல்வியைப் பெற உறுதி அளிக்கும் நோக்கத்தில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
AIAASC எனப்படும் அமெரிக்க சர்வதேச பள்ளி, கல்லூரிகள் அங்கீகார சங்கம், WASC எனப்படும் மேற்கத்திய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கத்துடன் இணைந்து இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சர்வதேச பள்ளிகளுக்கு கூட்டு அங்கீகாரத்தை வழங்குவதற்கான முன் முயற்சியை தொடங்கி உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான கூட்டு அங்கீகார செயல்முறை மாணவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்பதாலும், போட்டி நிறைந்த உலகளாவிய சூழ்நிலையில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்கவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
AIAASC மற்றும் WASC ஆகிய அமைப்புகள் புகழ்பெற்ற அங்கீகார அமைப்புகள் என்பதோடு அவை சர்வதேச பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை மதிப்பிடுவதற்கான அலகுகளுடன் கவனமாக கட்டமைக்கப்பட்டவை.
AIAASC இன் தலைமைக் குழு, டாக்டர் சரண்யா ஜெய்குமார் மற்றும் நவாப்சாதா முகமது ஆசிப் அலி ஆகியோரை சர்வதேச ஆலோசகர்கள் குழுவாக நியமிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
To apply for accreditation: https://www. aiaasc.org/apply