48வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கிரி தனது புத்தகங்களை வெளியிட்டனர்
சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில், 2025 ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிண்டிருப்பதை தெரிவிப்பதில், கிரி நிறுவனம் பெருமகிழ்ச்சி கொள்கிறது. பலதரப்பட்ட இலக்கிய, கலாச்சார மற்றும் ஆன்மிக ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், இந்தப் புத்தகத் திருவிழாவில், தனது வெளியீடுகளை, மூன்று பிரத்யேக ஸ்டால்களின் வாயிலாக, காட்சிப்படுத்தியுள்ளது.
ஜனவரி 3 அன்று, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, கிரியின் வெளியீடுகள், 13 தலைப்புக்களில் கீழ்கண்ட வெளியிடப்பட்டுள்ளது.
விரதங்கள் பண்டிகைகள் திருவிழாக்கள், உபநிஷதுகள், தி ஹிந்து ஃபெஸ்டிவல் (The Hindu Festival), அகல்கோரட் ஸ்ரீ சுவாமி சமர்த்த லீலாம்ருதம், அவதூத கீதை, ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதம், அனுபவ யோகா, லட்சுமியின் கம்பராமாயணம், வேல்மாறல், டேல்ஸ் ஆப் முருகா மற்றும் கணேச கீதா.
தென்பாரதத்தின் இலக்கிய அரங்கில் இருக்கின்ற பல்வேறு பதிப்பாளர்கள் நடுவில் கிரி தன்னை ஒரு முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. கிரி, ஏறக்குறைய ஆயிரம் தலைப்புகளில், இதுவரை தனது பாதிப்புக்களை வெளியிட்டு, நல்ல முறையில் விற்பனை செய்து கொண்டிருக்கின்றது. ஆன்மீகம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் சிறந்த தரம் மற்றும் வாசிப்பாளர்களின் நம்பகத்தன்மையை பெற்று தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளது.
கிரி, தனது பயணத்தை, நம் பாரதத்தின் வளமான ஆன்மீக ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் ஆழத்தில் வேரூன்றி, வளர்ந்து இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தப்பயணம், நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக திரு T S ராகவன் தலைவர், முன்னாள் தலைவர் – இந்தியன் வங்கி, திரு சொக்கலிங்கம், தலைவர் BAPASI, திரு செந்தில், உறுப்பினர் BAPASI மற்றும் ரிதம் பதிப்பகத்தின் உரிமையாளர், ஜோதிடர் திரு கண்ணன் பட்டாச்சாரியா, ஆன்மீக சொற்பொழிவாளர் திரு சுவாமிநாதன், சமய மற்றும் சமூக சேவகர் திரு கண்ணன், திருமதி மாதங்கி பாலாஜி, திரு அறிவழகன், திருமதி லக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள் சிறப்பித்து விழாவின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தினர். இந்த நிகழ்வில், இலக்கிய சிந்தனையாளர்கள், ஆன்மீக பற்றாளர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் உட்பட பலதரப்பட்ட வாசிப்பாளர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்வு நடைபெற்றது.