ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் 50 பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் அதன் ஹோம் ஹெல்த் கேர் சர்வீஸஸை அறிவிக்கிறது

0
226

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் 50 பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் அதன் ஹோம் ஹெல்த் கேர் சர்வீஸஸை அறிவிக்கிறது

– வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் தரமான உடல்நலப் பராமரிப்புக்கான அணுகலை விரிவுபடுத்துகிறது –

சென்னை, 2024 ஜூலை 3: இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை உடல்நலக் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்) இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் வீட்டு உடல்நலப் பராமரிப்புச் சேவைகள் (ஹோம் ஹெல்த்கேர் சர்வீஸஸ்) கிடைக்கும் என அறிவித்தது. மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட இந்த வழங்கலானது, வாடிக்கையாளரின் வீட்டு வாசலில், தடையற்ற மற்றும் உடனடி உரிமைகோரல் தீர்வுடன் பயனுள்ள உடல்நலப் பராமரிப்புத் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், கேர்24, போர்ட்டியா, கால்ஹெல்த், அதுல்யா ஹோம்கேர் உள்ளிட்ட முன்னணி வழங்குநர்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் வீட்டிலேயே மருத்துவப் பராமரிப்பை வழங்குகிறது.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ ஆனந்த் ராய் கூறினார், “ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், இன்றைய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்ய தொழில்நுட்பம் முக்கிய உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வீட்டு உடல்நலப் பராமரிப்புச் சேவைகள் (ஹோம் ஹெல்த்கேர் சர்வீஸஸ்) துவக்கமானது, அணுகக்கூடிய வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்பட்ட பராமரிப்புத் தீர்வுகள் மூலம் உடல்நலப் செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும். வாடிக்கையாளர்கள் இப்போது ஸ்டார் ஹெல்த் மொபைல் ஆப் மூலம் பல்வேறு தொற்றுநோய்களுக்கான 100% பணமில்லா வீட்டு உடல்நலப் பராமரிப்பு வசதியைப் பெறலாம்.

இந்தியாவின் மக்கள்தொகை 1.4 பில்லியனுக்கும் அதிகமாக இருப்பதால், நாடு குறிப்பிடத்தக்க உடல்நலப் பராமரிப்பு சவால்களை எதிர்கொள்கிறது, இதில் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு, உடல்நலப் பராமரிப்பு வழங்குநர்களுக்கான அணுகல் ஆகியவை அடங்கும். ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அணுகக்கூடியதாகவும், நியாயமான கட்டணத்திலும் உடல்நலப் பராமரிப்பை உறுதி செய்வதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க உறுதிகொண்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் காய்ச்சல், கடுமையான இரைப்பை குடல் அழற்சி, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று (UTI), கடுமையான இரைப்பை அழற்சி உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு எங்களை அழைப்பதன் மூலமும் அல்லது ஸ்டார் ஹெல்த் மொபைல் ஆப் மூலமும் சிகிச்சை பெறலாம். இந்த ஒத்துழைப்புடன், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் முதன்மையான மற்றும் முக்கியமான பராமரிப்பு, ஒருங்கிணைந்த உடல்நலப் பராமரிப்புச் சேவைகள், நர்சிங், முதியோர் பராமரிப்பு, பிசியோதெரபிஸ்ட்கள், குழந்தைப் பராமரிப்பு, ஆய்வக நோய் கண்டறிதல், மருந்தகம் ஆகியவற்றிற்கு தடையற்ற அணுகலை வழங்கும்.

உடல்நலப் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்து வருவதால், வழக்கமான மருத்துவமனைப் பராமரிப்புடன் ஒப்பிடும்போது வீட்டு உடல்நலப் பராமரிப்புச் சேவை வசதியாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும். கூடுதலாக, நோயாளிகளுக்கு அதிகரித்த வசதி, தனிப்பட்ட கவனிப்பு ஆகியவை அவர்களின் சொந்த வீட்டில் வசதியாக இருப்பது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.

வாடிக்கையாளர்கள் 044-69006900 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தி 100% பணமில்லா வீட்டு உடல்நலப் பராமரிப்பு (ஹோம் ஹெல்த் கேர்) வசதியைப் பெறலாம். இந்தச் சேவையின் மூலம் தொழில்முறைக் கட்டணம், நர்சிங் கட்டணம், மருந்துகள், ஆய்வகச் சோதனைகள் போன்ற அனைத்துச் செலவுகளையும் இந்தச் சேவை உள்ளடக்கியது. குறுகிய காலத்திற்குள் மருத்துவர்கள் ஒருவரின் வீட்டு வாசலில் இருப்பார்கள் மேலும் வாடிக்கையாளர்கள் மருந்து, நோயறிதல் சோதனைகள், சிறப்பு கவனிப்பு ஆகியவற்றை எளிதாக அணுகலாம்.

தமிழ்நாடு மாநிலத்தில் ஸ்டார் ஹெல்த்தின் இருப்பு

2024 நிதியாண்டில் விற்கப்பட்ட 12.5 இலட்சத்திற்கும் அதிகமான பாலிசிகளுடன் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் சில்லறை பிரீமியங்கள் ரூ. 2000 கோடியைத் தாண்டியதன் மூலம், தமிழ்நாட்டில் உடல்நலக் காப்பீட்டு சந்தை கணிசமாக வளர்ந்துள்ளது. பாலினப் பகிர்மானம் கிட்டத்தட்ட சமமாக உள்ளது, ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47%. இதன் பிரபலமான புராடக்டுகள் ஸ்டார் ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா  ஸ்டார் காம்பரஹென்சிவ் இன்சூரன்ஸ், ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்சூரன்ஸ் பாலிசி ஆகியவை ஆகும். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்கள் அதிக அளவு பிரீமியத்தைக் கொண்டுள்ளன.

இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப உந்துதல் அணுகுமுறையுடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மாநிலத்தில் 63% வணிகத்தைக் கொண்டுள்ளன. எலும்பியல், பேரதிர்ச்சி, இருதயவியல், புற்றுநோய், இரைப்பைக் குடலியல், தொற்றுநோய்கள் ஆகியவை முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் அடங்கும். எல்லா இடங்களிலும் ரொக்கமில்லா முறையை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம், 2024 நிதியாண்டில் 88% உரிமைகோரல்கள் ரொக்கமற்றவையாக இருந்தன. தமிழ்நாட்டில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் 90,000 முகவர்கள், 116 கிளைகள், 187 ஸ்டார் கிராமின் பீமா கேந்திராக்கள், 3400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆகியவற்றுடன் பரந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது,