ஷெரட்டன் கிராண்ட் சென்னை ரிசார்ட் & ஸ்பாவில் பிரமாண்டமாக நடைபெற்ற HUMANITARIAN AWARD 2025
சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியால் உருவாக்கப்பட்ட, கௌரவமிக்க HUMANITARIAN AWARD 2025 இல் நடிகை கெளதமி, பத்திரிகையாளர் பால்கி ஷர்மா, நடிகர் காளிதாஸ் ஜெயராம், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
மாமல்லபுரம் அருகே நேமிலிச்சேரியில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் சென்னை ரிசார்ட் & ஸ்பாவில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பிரத்யேக மற்றும் சிறப்புமிக்க விருது விழா, சமுதாயத்தில் மனிதாபிமான காரணங்களுக்காக, சிறப்பான பங்களிப்புகளை வழங்கிய மனிதர்களை கவுரவிக்கும் வகையில் நடத்தப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான விருது விழாவில், தலைமை விருந்தினராக நடிகை கவுதமி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல பத்திரிகையாளர் பால்கி ஷர்மா சிறப்புரை ஆற்றினார். கௌரவ விருந்தினர்களாக, புகழ்பெற்ற திரைப்பட நடிகர் காளிதாஸ் ஜெயராம், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருடன் உயர் ஐ. ஏ. எஸ் மற்றும் ஐ. பி. எஸ் அதிகார்கள் கலந்து கொண்டனர்.
மாலைப் பொழுதின் ரம்மியத்தை அலங்கரிக்க, கலைஞர்கள் சாய் விக்னேஷ் மற்றும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் அபிலாஷ் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் காந்தாராவின் வராஹ ரூபம் என்ற ஆன்மாவைத் தூண்டும் பாடலுடன் கூடிய சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தினர். மேலும் இசைக்கச்சேரியை மெருகூட்டும் வகையில், புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் சைந்தவி, மற்றும் அனில் சீனிவாசன் ஆகியோரும் இணைத்து செவி வழி இசை மயக்கத்தினை உருவாக்கினர்.
ஹுமானிடேரியன் விருதுகள் 2025 என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களை ஒன்றிணைத்து கருணை மற்றும் சமூக தாக்கத்தின் சக்தியைக் கொண்டாடும் நிகழ்ச்சி ஆகும்.
அதன்படி, இந்த ஆண்டு சன்மார் குழும தலைவர் என்.குமார், சங்கர நேத்ராலயா தலைவர் மருத்துவர் டி.எஸ்.சுரேந்திரன், மெட்ராஸ் இ.என்.டி. ரிசர்ச் ஃபவுண்டேஷன் இன் மேலாண் இயக்குனர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன், அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் வெங்கட், டிடிகே மருத்துவமனையின் மேலாண் அறங்காவலர் மாயா வரதராஜன், தி டவுன்ஸ் சின்றோம் பெடரேசன் ஆப் இந்தியாவின் இணை நிறுவனர் மருத்துவர் ரேகா வரதராஜன், சோசியல் மீடியா இன்ஃப்ளூன்ஸர் சமர்ஜீத் சிங், சுவாமி எஸ்டேட்ஸ் உதயகுமார் மற்றும் அக்ஷதா உதயகுமார், ஹஸ்தா பவுண்டேஷன், கிவ்வி ப்ராஜெக்டின் நிறுவனர் வேது சிக்கர் மணி மற்றும் மீனா டாடா உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.