ராஜஸ்தான் காஸ்மோ கிளப் பிளாட்டினம் (RCCP) தனது 20வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிக்கூடங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சுத்தமான குடிநீருக்காக 11 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளது.
RCCP நகரம் முழுவதும், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் ஏற்கனவே 83 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவியுள்ளது. இந்த எண்ணிக்கையை நடப்பு நிதியாண்டில் அதாவது 2024- 25க்குள் 101 ஆக உயர்த்த முடிவெடுத்துள்ளது.
தற்போது இந்த 11 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை மனோகர்ராஜ் கமலா கங்காரியா தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
1) *அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி திருவல்லிகேணி
2) அரசு கண் மருத்துவ மனை – எழும்பூர்
3) சென்னை மேல்நிலைப்பள்ளி – காமராஜர் சாலை, கொடுங்கையூர்
4) குழந்தை சுகாதார நிறுவனம் – எழும்பூர்
5) சக்தி பப்ளிக் பள்ளி* – திருத்தணி
6) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி – கோவூர்
7) அரசு பெண்கள் பள்ளி – கூடுவாஞ்சேரி
8) ரேடியேஷன் ஆன்காலஜி துறை – ராஜீவ் காந்தி GH
9) KMC மருத்துவமனை நெப்ராலஜி வார்டு & குழந்தைகள் பிளாக்
10) சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக், அரசு – ஸ்டான்லி மருத்துவமனை
11) ஸ்ரீ சம்பலால் பகாரியா ஜெயின் மேல்நிலைப் பள்ளி
இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பிரவீன் தாடியா, கௌரவ விருந்தினராக சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினரும் பேஸ்மேன் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீப்சந்த் லூனியா, சிறப்பு விருந்தினராக நடிகை கோமாள் ஷர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
RCCP தனது 20வது ஆண்டு கொண்டாட்டத்தை நினைவுகூறும் விதமாக, இந்திரதனுஷ் என்ற ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் மூலம், 2000 பேருக்கு வாழ்வில் நம்பிக்கை மற்றும் பிடிப்பை வழங்குவதற்காக ஒரு நாள் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
RCCP இன் அறங்காவலர் அபிஷேக் கன்காரியா, தலைவர் நவ்நீத் பானியா, செயலாளர் விமல் கர்னாவட் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.