ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளின் விமானப் பயணக் கனவுகளை நனவாக்கின

0
180

ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளின் விமானப் பயணக் கனவுகளை நனவாக்கின

ரவுண்ட் டேபிள் இந்தியா, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து அவர்களது விமானப் பயணக் கனவுக்கு உயிரூட்டினர்.

தி ஃப்ளைட் ஆஃப் பேண்டஸி என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 25 மாணவர்களும், கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு ஒரு நாள் பயணமாக விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். நாள் முழுவதும், கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த பயணம் திட்டமிடப்பட்டது.

மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95, மெட்ராஸ் மெட்ரோ லேடீஸ் சர்க்கிள் 70, கோயம்புத்தூர் ஏசிஎம்இ ரவுண்ட் டேபிள் 133, கோயம்புத்தூர் பெண்டா ரவுண்ட் டேபிள் 101 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 ஆகியவை ஜெம் மருத்துவமனையின் உதவியுடன் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த மாணவர்கள் முதல் விமான பயணத்தின் உற்சாகத்தை அனுபவித்தனர். குழந்தைகள் முதல் முறையாக விமான பயணத்தின் சிலிர்ப்பை அனுபவித்ததால் உற்சாகமும் எதிர்பார்ப்பும் விமானம் முழுவதும் நிரம்பி காணப்பட்டது. ரவுண்ட் டேபிள் இந்தியா பிரதிநிதிகள் பயணம் முழுவதும் குழந்தைகளுடன் சேர்ந்து, அவர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்தனர். சென்னையில் விமானம் தரையிறங்கியபோது, குழந்தைகள் மறக்க முடியாத சாகசங்கள் நிறைந்த ஒரு அதிரடி நிறைந்த நாளுக்கு தயார் செய்யப்பட்டனர்.

ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு இந்த நாளை உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த தினமாக மாற்றுவதற்காக தொடர்ச்சியான நிகழ்வுகளை மிகக் கவனமாக திட்டமிட்டிருந்தனர். இந்த நாளின் சிறப்பம்சமாக முதலில் மாணவர்கள் பிர்லா கோளரங்கம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குழந்தைகள் பிரபஞ்சத்தையும் அதன் தொடக்கங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களையும், அறிவியலின் அற்புதங்களையும் கண்டுவியந்தனர். அடுத்து, அவர்கள் ஒரு மீன் காட்சியகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கடலின் அதிசயங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் திரு.ராகுலன் சேகர், மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 இன் தலைவர், திரு. வருண் ஆனந்த், கோயம்புத்தூர் ஏ. சி. எம். இ. ரவுண்ட் டேபிள் 133 இன் தலைவர் திரு. சுபாஷ், திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 இன் தலைவர், திரு. பார்த்திபன், கோயம்புத்தூர் பெண்டா ரவுண்ட் டேபிள் 101 இன் தலைவர், திரு. குணால், திட்ட ஒருங்கிணைப்பாளர்திரு. மோகன்ராஜ், ரவுண்ட் டேபிள் 95 இன் ஃப்ளைட் ஆஃப் ஃபான்டசி ஒருங்கிணைப்பாளர்கள் திரு.விஜய் மற்றும் திரு.அர்பித் ஆகியோர் தலைமை தாங்கி செயல்படுத்தினர்.

ஒவ்வொரு குழந்தையும் பெரியதாக கனவு காண தகுதியானவர்கள் என்றும் இந்த அனுபவம் அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 இன் தலைவர் திரு. வருண் ஆனந்த் தெரிவித்தார்.

மெட்ராஸ் மெட்ரோ லேடீஸ் சர்க்கிள் 70 இன் தலைவர் திரு. பிஜல் ஷா, ஃப்ளைட் ஆஃப் பேண்டஸி நிகழ்ச்சி எப்போதும் தங்கள் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பிடித்திருக்கும் என்றும், குழந்தைகளின் கண்களில் வெளிப்படும் மகிழ்ச்சி கலந்த பிரகாசம் விலைமதிப்பற்றது என்றும் தெரிவித்தார். அவர்களின் கனவுகளை பறக்க வைப்பதில் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகியவை ஃப்ளைட் ஆஃப் பேண்டஸி போன்ற முன்முயற்சிகள் மூலம் சமூக காரணங்கள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. பொருளாதார நலிவுற்ற குழந்தைகளுக்கு இத்தகைய அனுபவங்களை வழங்குவதன் மூலம், அவர்கள் மகிழ்ச்சி மற்றும் திறன்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளனர்