பிரபல உடல்நல மற்றும் சரும ஆரோக்கிய நிறுவனத்தின் The CoBeing ஸ்கின் க்ளோ கொலாஜன் எனும் தயாரிப்பை நடிகை பார்வதி நாயருடன் இணைந்து ரூபினா அஃப்ரோஸ், நிகிதா சுரேஷ், ரூபா மற்றும் கவிதா பாண்டியன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்

0
173

பிரபல உடல்நல மற்றும் சரும ஆரோக்கிய நிறுவனத்தின் The CoBeing ஸ்கின் க்ளோ கொலாஜன் எனும் தயாரிப்பை நடிகை பார்வதி நாயருடன் இணைந்து ரூபினா அஃப்ரோஸ், நிகிதா சுரேஷ், ரூபா மற்றும் கவிதா பாண்டியன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

சென்னை, ஹயாத் நட்சத்திர விடுதியில், உடல்நலம் மற்றும் சரும ஆரோக்கியத் துறையில் மிகப்பெரும் வளர்ச்சி கண்டுவரும் The CoBeing நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், அதிகாரப்பூர்வமாக தனது தனித்துவமான தயாரிப்பான ஸ்கின் க்ளோ கொலாஜனை அறிமுகப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகை பார்வதி நாயர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஃபேஷன் டிசைனர் ரூபீனா அஃப்ரோஸ், ஊட்டச்சத்து நிபுணர் முனைவர். நிகிதா சுரேஷ், சரும பாதுகாப்பு நிபுணர் டாக்டர் ரூபா ஆகியோர் கலந்து கொண்டு தலைமை தாங்கினர். மேலும் உடல் ஆரோக்கிய வல்லுநர்கள், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் வாழும் கலை நிபுணர்களும் இந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக The CoBeing தனித்துவமான, நடிகை மீனாவின் நடிப்பில் உருவான ஸ்கின் க்ளோ கொலாஜன் விளம்பரம் வெளியிடப்பட்டது.

அதில், கொலாஜனின் முக்கியத்துவத்தையும், அது தரும் நீடித்த பிரகாசம் மற்றும் அதனை உருவாக்க எவ்வாறு உதவுகிறது என்பதையும் விளம்பரம் விரிவாக விளக்கியது. குறிப்பாக நம்பிக்கையுடன் எந்த வயதிலும் இதனைப் பயன்படுத்தலாம் என்பதையும் உறுதி செய்து விளம்பரம் வெளியிடப்பட்டது.

இந்த விளம்பரத்தின் மூலம், கொலாஜன் பற்றி மக்களுக்கு முழுமையாக விளக்க விரும்பியதாக, The CoBeing நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு மணி கூறினார்.

இந்த நிகழ்வில் ஸ்கின் க்ளோ கொலாஜன் என்ற அடுத்த தலைமுறை அழகு சாதனம் காட்சிப்படுத்தப்பட்டது. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஜப்பானிய வெல்நெக்ஸ், கடல் கொலாஜன் பெப்டைட்களால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இயற்கை மூலப் பொருட்களுடன், தோலின் நீர்ச்சத்தை உயிர்ப்பித்து, பளபளப்பான சருமம் மற்றும் ஆரோக்கியத்தை இது உறுதி செய்கிறது.

மேலும் இந்த ஸ்கின் க்ளோ கொலாஜன், பினா கோலாடா மற்றும் மாங்கோ பீச் போன்ற வெவ்வேறு வகைகளிலும் கிடைக்கிறது. ஸ்கின் க்ளோ கொலாஜன்
பிசுபிசுப்பு மற்றும் அசௌகரியத்திலிருந்து விடுபட்டு, செயல்திறன் மற்றும் நிறைவு ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.