பத்மஶ்ரீ விருதுபெற்ற சமையல் கலை வல்லுநர் செஃப் தாமுவிற்கு சவுத் இந்தியன் செஃப்ஸ் அசோசியேஷன் (SICA) சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா!

0
156

பத்மஶ்ரீ விருதுபெற்ற சமையல் கலை வல்லுநர் செஃப் தாமுவிற்கு சவுத் இந்தியன் செஃப்ஸ் அசோசியேஷன் (SICA) சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பரங்கிமலையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டல், ஜி.ஆர்.டி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய செஃப்ஸ் அசோசியேஷன் (SICA) ஒரு பிரமாண்டமான பாராட்டு விழாவை பெருமையுடன் நடத்தியது.

செஃப் தாமு என பிரபலமாக அறியப்படும் சமையல் கலை வல்லுநர் கே. தாமோதரன் சர்வதேச சமையல் கலை மற்றும் தென்னிந்திய சமையல் கலைக்கு அளித்த இணையற்ற பங்களிப்பிற்காக, இந்திய அரசால் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு SICA சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. செஃப் தாமுவிற்கு, நடத்தப்பட்ட பாராட்டு விழா அரவணைப்பு, நன்றியுணர்வு மற்றும் இதயப்பூர்வமான போற்றுதலின் சங்கமமாக திகழ்ந்தது.

இந்நிகழ்ச்சியில் இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பின் (IFCA) தலைவர்,செஃப் மஞ்சித் சிங் கில், SICA வின் பொதுச்செயலாளரும் IFCA வின் துணைத் தலைவருமான செஃப் சீதாராம் பிரசாத் மற்றும் IFCA வாரிய உறுப்பினர்கள்,புகழ்பெற்ற தலைமை சமையல் வல்லுனர்கள், பொது மேலாளர்கள், டீன்கள் மற்றும் முன்னணி விருந்தோம்பல் நிறுவனங்களின் இயக்குநர்கள்,தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகங்களின் மதிப்புமிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு செஃப் தாமுவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அவரது வாழ்க்கையும், பணியும் சிறப்பானது, அவரது பயணத்தில் தா குடும்பத்தினர் ஒருங்கிணைந்த ஆதரவைக் வழங்கியுள்ளனர். விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமானதாக மாற்றினர் SICA மற்றும் IFCA இணைந்து நடத்திய இந்த நிகழ்வு ஒரு பாராட்டுவிழா மட்டுமல்லாமல், வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பாரம்பரியத்தின் எழுச்சியான கொண்டாட்டமாகவும் அமைந்தது.

சமையல் கலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் செஃப் தாமு. அவரது புகழ் நிறைந்த பயணம் அசைக்க முடியாத ஆர்வம், விடாமுயற்சி மற்றும் சமையல் கலைக்கான நீடித்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்ற செஃப் தாமு, சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்டில்
ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளோமா முடித்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம். பி. ஏ. பட்டம் பெற்றார்.ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் இவர் ஆவார்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், செட்டிநாடு மற்றும் தென்னிந்திய உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.புகழ்பெற்ற ஹோட்டல் பிராண்டுகளுடன் பணிபுரிந்து நிபுணத்துவத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றார்.

டாக்டர் M.G.R பல்கலைக்கழகம், EMPEE நிறுவனங்கள் மற்றும் அசான் நினைவு கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களில் 6,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

ஹோட்டல் மேலாண்மை மாணவர்களுக்காக நான்கு பாடப்புத்தகங்களை எழுதியு மிகப்பெரும் பங்களிப்பு செய்துள்ளார் செஃப் தாமு.

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மிக நீண்ட தனிப்பட்ட சமையல் மராத்தானில் 617 உணவுகளை தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார் செஃப் தாமு.

ராஜ் டிவி, பொதிகை, ஜெயா டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இவர் தோன்றிய நிகழ்ச்சிகள் மிகப்பிரபலமடைந்தன.

குறிப்பாக விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இவருடைய நகைச்சுவை கலந்த பங்களிப்பு இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
2700 க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகளுடன் 17 சமையல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

2008 முதல் 2011 வரை மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுடன் இணைந்து இவர் பணியாற்றியது இவரது சமூக பங்களிப்புக்கு சான்று.

32 மாவட்டங்களில் இவர் மூலம் 1,40,000 மதிய உணவு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சமையல் தரங்கள் மற்றும் நலனை மேம்படுத்துவதற்காக இவர் தலைமையில் SICA மூலம் தொண்டு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இறுதியில் செப்டம்பர் 2025ல் மாதத்தில் நடைபெற போகும் SICA 7th Edition of Culinary Olympiad லோகோ மற்றும் விதி புத்தகம் வெளியீடப்பட்டது.