‘நிர்ஜரா’ என்னும் நீர்வீழ்ச்சி போன்ற பிரத்யேக வைர நகை கலெக்ஷனை அறிமுகப்படுத்துகிறது, ஜூவல்ஒன்!

0
211

‘நிர்ஜரா’ என்னும் நீர்வீழ்ச்சி போன்ற பிரத்யேக வைர நகை கலெக்ஷனை அறிமுகப்படுத்துகிறது, ஜூவல்ஒன்!

 சென்னைசெப். 3, 2021

 எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் (Emerald Jewel Industry India Limited) நிறுவனத்தின் பிரபலமான சில்லரை வர்த்தக பிராண்டான ஜூவல்ஒன் (JewelOne). புதிதாக வைர நகை கலெக்ஷனை அறிமுகம் செய்துள்ளது. நீர் வீழ்ச்சி அழகை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய கலெக்ஷனுக்கு நிர்ஜரா (NIRJHARA) எனப் பெயரிடப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சி போன்று அழகிய தோற்றப்பொலிவுடன் திகழ்வதோடு மட்டுமின்றி, வைரம் போன்ற காலத்தால் அழியாத வடிவமைப்பைக் கொண்டதாக இது விளங்கவுள்ளது.

புதிய வைர நகை லோகோவையும், கலெக்ஷனையும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. கேசீனிவாசன்தலைமை செயல் அதிகாரி  திரு.என்வைத்தீஸ்வரன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் புரசைவாக்கத்தில் உள்ள ஜூவல்ஒன் கிளையில் இன்று (செப். 3, 2021) அறிமுகம் செய்தனர்.

நகை வடிவமைப்பில் மிகவும் அனுபவம் மிக்கவர்களால் கலைநயத்துடன் இந்த வைர நகை கலெக்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இயற்கை வைரக் கற்கள் (Natural Diamonds) பதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நகைகளை 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த உற்பத்தியாளருக்கான ஜே.என்.ஏ. (JNA) விருது பெற்ற எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் கோவை நகரிலிருந்து உருவாகி இன்று ஆசியாவிலேயே மிக உயர்ந்த வைர நகை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழ்கிறது.

எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. கேசீனிவாசன், வைர நகை கலெக்ஷனை அறிமுகம் செய்து பேசுகையில், “ஆபரணங்கள் அணியும் மக்களின் வழக்கத்தில் மிகப் பெரிய மாறுதலை எங்களது எமரால்டு ஏற்படுத்தியுள்ளது. கலை நயமுடன் தொழில்நுட்பத்தையும் இணைத்து செயல்படுத்தி இத்துறையில் மிகப் பெரிய புரட்சியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நகைகளின் தரத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் ஹால்மார்க் தரச்சான்றை கட்டாயமாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் முக்கியமானதாகும். இத்தொழிலில் ஈடுபடத் தொடங்கிய நாள் முதலாக தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வந்துள்ளோம். எங்களது ஜூவல்ஒன் நகைகள், அறிமுகமான 2012-ஆம் ஆண்டிலிருந்தே ஹால்மார்க் தரச் சான்றுடன் வெளிவருகிறது.

தொடக்கத்திலிருந்தே மிகச் சீரிய வளர்ச்சியை எட்டியிருப்பதால், விரைவில் பிரான்சைஸி முறையில் தொழில்முனைவர்களோடு கைகோர்த்து,  ஜூவல்ஒன் தேசிய பிராண்டாக உருவெடுக்கவுள்ளது. இப்போது வெள்ளி நகை பிராண்டான ஜிலாரா (Zilara)வை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்நகை வர்த்தகத்தில் சூப்பர் ஸ்டாகிஸ்ட்டுகள் (Super-stockists), ஸ்டாகிஸ்ட்டுகள் (Stockists) மற்றும் சில்லரை வர்த்தகர்களையும் (Retailers) புதிதாக இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். இது தவிர ஜூவல்ஒன் பிராண்டு நகைகளை, பிற நகைக் கடைகளில் (Shop-in-Shop) விற்பனை செய்யும் முறையையும் மேற்கொண்டு அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

புதிய கலெக்ஷன் நகைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. என்வைத்தீஸ்வரன் கூறியதாவது, “நீர்வீழ்ச்சியின் அழகை அடிப்படையாகக் கொண்டு இந்த பிரத்யேக வைர நகை கலெக்ஷன் நிர்ஜரா உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையும் மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு தேர்ச்சிபெற்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகையின் வடிவமைப்பும் இயற்கை அழகை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த நகைகள் பெண்களின் விருப்பத்தை அறிந்து வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஜூவல்ஒன் பிராண்ட் நகைகள் பெண்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.

அந்த வரிசையில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் பெண்களின் தேர்வாக இது நிச்சயம் அமையும். அதை உணர்த்தும் வகையில் ‘உனது வாழ்க்கை – உனது தேடல்என்பதான கருப்பொருளைக் (Tagline) கொண்டு இதனை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்றைய தலைமுறை நவநாகரிக பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக மட்டுமின்றி அவர்களது மன வலிமையையும், அழகையும் வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். எங்களது நிறுவனம் அண்மையில் ‘அயானா’ கலெக்ஷன் (Ayanaa Collection) என்ற பெயரில் மலர்களை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்திய தங்க நகை ஆபரணங்கள், பெண்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே வரிசையில் இந்த நிர்ஜரா வைர நகை கலெக்ஷனும் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜூவல்ஒன் பிராண்டின் இந்தக் கலெக்ஷன், நீர்வீழ்ச்சிக்கு இணையாக ஒப்பிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால்.  மிகவும் வலிமையான பந்தத்தை பெண்கள் மத்தியில் உருவாக்கும். புதிய கலெக்ஷனில் நெக்லஸ், காதணி, மோதிரம், பென்டன்ட் ஆகியன 70 விதமான வடிவமைப்பில் வந்துள்ளன. இந்தத் தயாரிப்புகளின் விலை ரூ. 30 ஆயிரத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரையிலான விலையில் ஆபரணங்கள் கிடைக்கும்” என்றார்.

ஜூவல்ஒன், இப்புதிய கலெக்ஷனை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனது 14 விற்பனையகங்களில் அறிமுகம் செய்துள்ளது. சில்லரை வர்த்தகத்தை ஃபிரான்சைஸ் முறையில் இந்தியா முழுவதும் விரிவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ALSO READ:

JewelOne launches NIRJHARA – Exclusive Diamond Jewelry Collection Inspired by Waterfalls