டாக்டர்.சாம் பால் தலைமையிலான, பால்சன்ஸ் குழுமத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பிரவோக் விருதுகள் வழங்கும் விழாவில், ஐசரி கணேஷ், பாக்யராஜ், ஆர்.பார்த்திபன், குஷ்பூ ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னை லீலா பேலஸில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற பிரவோக் விருதுகள் 2025 நிகழ்ச்சியில், சினிமா, கலாச்சாரம், வணிகம் மற்றும் புதுமை உள்ளிட்டவற்றில் புத்திசாலித்தனத்தையும், திறமையையும் வெளிப்படுத்தியவர்கள் கொண்டாடப்பட்டனர்.
புரோவோக் விருதுகள் தொழில்துறைகளிலும் சமூகத்திலும் ஒரு சக்திவாய்ந்த அடையாளத்தை உருவாக்கும் தனித்துவமான நபர்களை தொடர்ந்து கௌரவிக்கிறது.
500க்கும் மேற்பட்ட விஐபிகள் உட்பட, 1,200 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களுடன் பார்வையாளர்கள் முன்னிலையில் 80க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
டாக்டர் ஐசரி கே. கணேஷ் தொழில்துறையில் சாதித்ததற்காவும், தன்னுடைய தொண்டுகளுக்காவும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கபட்டார்.
இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ், நடிகை குஷ்பு, இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் ஆகியோர் திரைத்துறைக்கு வழங்கிய பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த துணை நடிகருக்கான விருது கலையரசனுக்கு வழங்கப்பட்டது. OTT தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பின்னணி பாடகருக்கான விருது சீன் ரோல்டனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது பிரியா பவானி சங்கருக்கும், சிறந்த பல்சுவை நடிப்பிற்கான விருது சூரிக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது நித்திலன் சாமிநாதனுக்கும் வழங்கப்பட்டது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் நாயகன் நடிகர் பவிஷ் நாராயணனுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விருதும் வழங்கப்பட்டது. விளையாட்டு வீரா குணாலன் கமலினி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சினிமா, தொண்டு, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறையில் சிறந்த பங்களிப்புகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்கள் கொண்டாடப்பட்ட இந்த மாலை ஒரு விழா மட்டுமல்ல, இது சிறப்பை உயர்த்தும், ஊக்குவிக்கும் மற்றும் மறுவரையறை செய்யும் கொண்டாட்டமாக திகழ்ந்தது.
எப்போதும் போல, பிரவோக் ஒரு பிராண்டாக மட்டுமல்லாமல் தடைகளை உடைத்து, சவாலான விதிமுறைகளை எதிர்கொண்டு, உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுபவர்களை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இயக்கம் என நிரூபித்தது.
ஃபேஷன், அழகு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் சிறந்து விளங்குவதைக் கொண்டாடும் மதிப்புமிக்க புரோவோக் லைஃப்ஸ்டைல் விருதுகளின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக பியூட்டி கேரேஜ் இருந்தது.