சென்னையில் 250 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள புதிய வசதியுடன் தன் தடத்தை விரிவுபடுத்துகிறது கைடுஹவுஸ் நிறுவனம்!

0
157

சென்னையில் 250 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள புதிய வசதியுடன் தன் தடத்தை விரிவுபடுத்துகிறது கைடுஹவுஸ் நிறுவனம்!

  • கெப்பல் ஒன் பாரமவுண்டில் உள்ள அதிநவீன வளாகம்முக்கிய வேலைளில் ஈடுபட 5,000 ஊழியர்களுக்கான இடத்தைக் கொண்டிருக்கிறதுபுதுமை கண்டறிதல்ஒத்துழைப்புக்கான மையமாக இந்த வசதி செயல்படும்.

சென்னை, வணிக மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு சேவை செய்யும் உலகளாவிய ஆலோசனை, தொழில்நுட்பம், சேவை நிர்வாக நிறுவனமான கைடுஹவுஸ் (Guidehouse), சென்னை போரூரில் உள்ள கெப்பல் ஒன் பாரமவுண்டில் (Keppel One Paramount) 2,50,000 சதுர அடி பரப்பளவில் ஒரு புதிய வசதியைத் திறந்துள்ளது. புதுமை கண்டறிதல் மற்றும் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய வளாகம், இந்தியாவின் திறமைவாய்ந்த பணியாளர் குழுவை உருவாக்குவதில் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடு செய்துவருவதைப் பிரதிபலிக்கிறது.

இது குறித்து கைடுஹவுஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஸ்காட் மெக்கின்டைர் (Mr. Scott McIntyre) கூறுகையில், “இது கைடுஹவுஸ் நிறுவனத்தின் உலகளாவிய மிகப்பெரிய அலுவலகம், இது எங்களிடம் பணிபுரிபவர்கள், திட்டங்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் விரிவாக்கப்பட்ட எங்கள் புதிய அலுவலகம் கொண்டுவந்துள்ள வாய்ப்புகள், நிபுணத்துவம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் உலகளாவிய செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் எங்கள் நீண்டகால வளர்ச்சியை இது ஆதரிக்கிறது” என்றார்.

இரண்டு ஷிப்டுகளில் 5,000 ஊழியர்கள் வேலை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு வசதி சுகாதாரம், நிதி சேவைகள், தொழில்நுட்பம், கார்ப்பரேட் ஆதரவு செயல்பாடுகளில் கைடுஹவுஸின் உலகளாவிய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும். கைடுஹவுஸின் முக்கிய உலகளாவிய விநியோக மையங்களில் ஒன்றான சென்னையில் நிறுவனம் மேற்கொண்டுள்ள விரிவாக்கப் பணியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை புதிய அலுவலகத் திறப்பு விழா குறிக்கிறது.

வியூகரீதியாக ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எல்.இ.இ.டி. பிளாட்டினம்-சான்றளிக்கப்பட்டுள்ள இந்த வசதி, நெகிழ்வான பணிநிலையங்கள், ஆரோக்கியப் பகுதிகள், பசுமை நிலப்பரப்புகள், விரிவான உணவு மற்றும் உணவு விநியோக விருப்பங்கள் உள்ளிட்ட பிரீமியம் பணியிடம், வாழ்க்கை முறை சார்ந்த வசதிகளை வழங்குகிறது.

இது குறித்து கைடுஹவுஸ் இந்தியாவின் பார்ட்னரும் இந்தியத் தலைவருமான திரு. மகேந்திர ராவத் (Mr. Mahendra Rawat) கூறுகையில், “எங்கள் உலகளாவிய சேவை நிர்வாக விநியோக வலையமைப்பில் ஒரு முக்கிய மையமாக சென்னையில் கைடுஹவுஸ் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான வளர்ச்சியில் இந்த விரிவாக்கம் ஒரு முக்கிய நிலையாகும். புதுமை கண்டறிதல், ஒத்துழைப்புக்கான மையமாகச் செயல்படும் இந்த அதிநவீன கட்டமைப்பு வசதி, எதிர்காலத்திற்குத் தயாராக, மக்களை முதன்மையாகக் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துகிறது” என்று கூறினார்.

இந்தியாவில் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் திட்டங்களை ஆதரிக்க உள்ளூர் அரசுசாரா நிறுவனங்களுடன் கைடுஹவுஸ் கூட்டுசேர்ந்துள்ளது.

2018ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கைடுஹவுஸ், ஐந்து மடங்கு வளர்ச்சியை அடைந்து $3 பில்லியனுக்கும் அதிகமாகவும், உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 18,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் கூடுதல் சந்தைகளில் விரிவடைந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் நிறுவனங்களின் 2024 இன்க். 5000 பட்டியலில் இடம்பெற்றுள்ள கைடுஹவுஸ், அதன் ஒருங்கிணைந்த வணிக – பொதுத்துறை வணிக நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளுடன் அதன் விரைவான செயல்பாடு, திறன்கள், அளவுகளில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

கூடுதல் விவரங்களுக்கு www.guidehouse.com  என்ற இணையதளத்தை பார்வையிடவும்.