சென்னையில் நடைபெற்ற புரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2024 ஆண்டிற்கான விருதை பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன்,பத்மஸ்ரீ பத்ரப்பன்,கலைமாமணி டெல்லி கணேஷ்,கலைமாமணி கே.என்.ராமசாமி, கலைமாமணி ராஜ்குமார் பாரதி,கலைமயம் ஸ்ரீமதி, எஸ் எஸ் கலைராணி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை மியூசிக் அகாடமியில், நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலைத் துறையில் புகழ்பெற்ற கலைஞர்களை வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கபட்டனர்.
இவ்விழாவில் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, முன்னாள் டி.ஜி. பி. ஜாங்கிட், CSK CEO காசி விஸ்வநாதன், சாம் பால் மற்றும் அஸ்வினி சாம் பால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மஸ்ரீ ஷோபனா சந்திரகுமார் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் ஸ்ரீ அபிஷேக் ரகுராம் ஆகியோரின் கண்கவர் நிகழ்ச்சிகளை மக்கள் கண்டுகளித்தனர்.
பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன், பத்மஸ்ரீ பத்ரப்பன், கலைமாமணி டெல்லி கணேஷ், கலைமாமணி கே.என்.ராமசாமி, கலைமாமணி ராஜ்குமார் பாரதி, கலைமயம் ஸ்ரீமதி, எஸ் எஸ் கலைராணி உள்ளிட்ட, கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.