
’சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கான புதுமையான பட்டப்படிப்புத் திட்டம் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது’
சென்னை, 28 ஜூலை 2021:. பி எஸ். அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இன்று பி.ஏ. பொது கொள்கை திட்டம் என்ற ஒரு புதிய கல்வித் திட்டத்தினை அறிமுகம் செய்து வைத்தது. பி.ஏ. பொது கொள்கை திட்டம் என்பது மாணவர்கள் தமது பட்டப்படிப்பினை பெறுவதோடு, அவர்கள் பட்டம் பெறும் நேரத்தில் சிவில் சர்வீஸஸ் சேவைகளுக்கும் தயாராவார்கள் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு சட்டத்தை மதிக்கும் பணித்துறைஞராக வருவதற்கு உருவாகும் விதத்தில் ஒரு புதிய வழியை வழங்குகிறது
பி.ஏ. பொது கொள்கை திட்டம், ஒரு பட்டப்படிப்பு மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும் கூடுதல் நேரத்திற்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்திலிருந்து வருகை தந்திருந்த பிரமுகர்கள், துணைவேந்தர் டாக்டர் பிர் முகமது; பதிவாளர் டாக்டர்.ஏ.அசாத்; கூடுதல் பதிவாளர் டாக்டர் ராஜா உசேன் மற்றும் முன்னாள் உதவி. கமாண்டன்ட் (சிஆர்பிஎஃப்) மற்றும் பொது கொள்கை திட்ட இயக்குநர், திரு. இளஞ்செழியன் ஆகியோர் ஆவர். அவர்களுடன் டாக்டர் சந்தோஷ்பாபு, ஐ.ஏ.எஸ். (ஓய்வுபெற்ற) (1995 தொகுதி); திரு வி.காமராஜா, ஐ.பி.எஸ் (ஓய்வுபெற்ற) (1987 தொகுதி) மற்றும் திரு. சஷிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ் (ஓய்வுபெற்ற) (2009 தொகுதி) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக வந்திருந்தனர்.
இந்த பட்டப்படிப்பினை கற்றல் குறித்துப் பேசிய டாக்டர் சந்தோஷ்பாபு, ஐ.ஏ.எஸ். அவர்கள், ”ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பது பல இளம் இந்தியர்களின் கனவாகும், இதை நீங்கள் எவ்வளவு விரைவாக செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக ஆண்டுகள் நீங்கள் நமது தேசத்தின் சேவையில் இருப்பீர்கள். பி.எஸ்.ஏ. கிரசன்டின் இந்த பி.ஏ. பொதுக் கொள்கை பட்டப்படிப்புத் திட்டமானது, யு.பி.எஸ்.சி.யின் கோரிக்கைகளுக்கு இணங்கும் வகையில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்வதற்கு பி.ஏ.(பொதுக் கொள்கை) உங்களுக்கு ஒரு இயற்கையான தேர்வாகும். உங்களின் 22 வயதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்றொரு கனவு உங்களுக்கு இருந்தால், 12 ஆம் வகுப்பு முடிந்தவுடனே இந்தப் பட்டப்படிப்பினை படிப்பதற்கு ஆயத்தமாக வேண்டும்” என்று கூறினார்.
பி.ஏ. பொது கொள்கை திட்டம் பட்டப்படிப்பின் சில அம்சங்கள் மற்றும் நன்மைகள் பின்வருமாறு:
● கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களில் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் / ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளால் வழிகாட்டுதல் ஒரு அனுபவமிக்க அரசு ஊழியர் போன்றதொரு கண்ணோட்டத்தை மாணவர்கள் பகிர்ந்து கொண்டு உணர்வதற்கு உதவுகிறது.
● பாடத்திட்டத்தில் என்.சி.சி. யினை சேர்த்துள்ளதன் மூலமாக தேசபக்தி உணர்வினை விழித்தெழச் செய்வதுடன் மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கும் அதன் மூலம் அவர்களின் லட்சியங்களை அடையும் எண்ணத்தை மேலும் அதிகரிக்கவும் உதவுகிறது.
● பி.ஏ. பொது கொள்கை திட்டம் ஒவ்வொரு அரசு ஊழியரின் தனிச்சிறப்பான கல்வி அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன்களைப் பெறும் வகையில் உருமாறும் வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நம் தேசத்தை பெருகிய முறையில் சிக்கலான சவால்களைக் கையாள்வதில் பன்முக அணுகுமுறையை கற்பித்தல் மூலம் எங்கள் மாணவர்களுக்கு உதவுவோம் என்று நம்புகிறோம்.
பி.ஏ. பொது கொள்கை திட்டம் பட்டப்படிப்பிற்கான விண்ணப்ப செயல்முறை பி.எஸ். அப்துர் ரஹ்மான் க்ரெசண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சேர்க்கையைப் பற்றி அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், www.crescent.education இணையதளத்தைப் பார்வையிடவும்.
தொலைபேசி + 91-9543277888