கோவையில் பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவை  நேரில் சந்தித்து இலங்கையில் முதலீடு செய்ய அந்நாட்டு இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அழைப்பு விடுத்துள்ளார்

0
151
கோவையில் பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவை  நேரில் சந்தித்து இலங்கையில் முதலீடு செய்ய அந்நாட்டு இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அழைப்பு விடுத்துள்ளார்
இலங்கையின் வேளாண்மை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது கோவை சென்ற அவர், பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கையின் பொருளாதாரத்திற்கு இந்திய அரசு உதவி வருவதாக தெரிவித்தார். மேலும் மீள்குடியேற்றங்கள் அமைக்கவும் இலவச வீட்டு வசதி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் இந்திய அரசு இலங்கையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் மேம்பட இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபுவிடமும் இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பிற்கு நன்றி தெரிவித்த விஷ்ணு பிரபு, முதலீடுகள் தொடர்பாக தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.