குரோம்ப்டன் ஃபேன்ஸ் ரத்னா ஃபேன் ஹவுசில் ‘நைட்டியோ’ – ‘ஃப்ளூய்டோ’ – ‘சூப்பர்ஃப்ளோ’ ஆகிய மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தினர்

0
159

குரோம்ப்டன் ஃபேன்ஸ் ரத்னா ஃபேன் ஹவுசில் ‘நைட்டியோ’ – ‘ஃப்ளூய்டோ’ – ‘சூப்பர்ஃப்ளோ’ ஆகிய மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தினர்

House of Crompton மூன்று NITEO, FLUIDO, SUPERFLO என்ற தனித்துவமான தயாரிப்புகளை கிராம்ப்டன் ஃபேன்ஸ் பி. எல் தலைவர் திரு. அனுஜ் அரோரா, ரத்னா ஃபேன் ஹவுசின் நிர்வாக இயக்குநர் திரு. குரு விஜய் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ரத்னா ஃபேன் ஹவுசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரோம்ப்டன் குடும்பத்தின், Niteo, Fluido மற்றும் Superflo ஃபேன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Niteo வகை ஃபேன்கள் “நியூக்ளியஸ்” இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட முதல் ஃபேன் ஆகும்.  இது பிரத்யேக PCBயைக் கொண்டுள்ளதால், நீடித்த உழைப்பு, எளிதான சேவை மற்றும் சிறந்த தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. இது உற்பத்தியின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மீது அதிக உறுதியை வழங்குகிறது.

Fluido இண்டக்ஷன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஃபேன். இதன் அட்டகாசமான, நேர்த்தியான அழகியல் வடிவமைப்பு,  பிரீமியம் தோற்றத்துடன்  அமைதியான செயல்பாடு ஆகியவை இதனை ஃபேன் வர்த்தகத்தில் தனித்து நிற்கச் செய்கிறது. இது வடிவம் மற்றும் செயல்பாட்டின் சரியான தயாரிப்பு ஆகும்.

260 CMM காற்று வழங்கக்கூடிய, சந்தையில் உள்ள ஒரே இண்டக்ஷன் ஃபேன் Superflo மட்டுமே. இந்த வகை ஃபேன்களில் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.  மேம்பட்ட “டர்போபூஸ்ட்” தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இது, சந்தையில் உள்ள மற்ற ஃபேன்களை விட சிறந்த ஆயுள் மற்றும் செயல்திறனை வழங்குகிறது.

இந்த மூன்று மாடல்களும் தனித்துவமான மற்றும் துடிப்பான வண்ணங்களில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லங்களின் அழைகை மேலும் கூட்ட சரியான தேர்வாக அமையும்.

Niteo, Fluido, Superflo என்ற தனித்துவமான தயாரிப்புகளை கிராம்ப்டன் ஃபேன்ஸ் பி. எல் தலைவர் திரு. அனுஜ் அரோரா, ரத்னா ஃபேன் ஹவுசின் நிர்வாக இயக்குநர்
திரு. குரு விஜய் நேஷனல் டிரேட் மார்கெட்டிங் மேலாளர், திரு. ராமகிருஷ்ணா கெய்க்வாட், தெற்கு மண்டல தலைவர் திரு.சச்சின் தாரேஷ்வர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

3 மாடல் ஃபேன்களின் தனித்துவங்கள்: 

*Niteo*

குரோம்ப்டனின் சொந்த “நியூக்ளியஸ்” இயங்குதளத்தில் கட்டப்பட்ட முதல் ஃபேன் இது.  நீடித்தஆயுள், செயல்திறன் மற்றும் ஸ்மார்ட் கட்டுப்பாட்டை இந்த மாடல் மறுவரையறை செய்கிறது.  60% வரை மின் சேமிப்பு,அதிக ஆற்றல் திறன் கொண்ட BLDC தொழில்நுட்பம், அதிவேகத்தில் சுழல வெறும் 24W மின்சாரம் மட்டுமே பயன்படுத்தும் இந்த ஃபேன்  மேம்பட்ட ஆயுள், சிறந்த தரக் கட்டுப்பாடு மற்றும் எளிதான சேவைக்காக, பிரத்யேக PCB உடன் உருவாக்கப்பட்டுள்ளது. ActivSight UI- அமைப்பு பயனர் தொடர்புகளை மேம்படுத்தும்.

சூடான எல். இ. டி விளக்குகள் இந்த ஃபேன் உடன் இணைக்கப்பட்டுள்ளதால், இது இரவு விளக்குகளாகவும் பயன்படுகிறது. அதேநேரம் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அறையில் எங்கிருந்தும் எளிதாக கட்டுப்படுத்த வசதியான ஐஆர் ரிமோட் வழியாக இந்த ஃபேன் இயக்கப்படுகிறது.  இந்த ஃபேன் 4 ஆண்டு  உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. Niteo ஃபேன் மட்டுமல்ல, நீண்ட கால செயல்திறனில் நம்பிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு வாழ்க்கை முறையை மேம்படுத்தும் ஒரு ஸ்மார்ட் தொழில்நுட்பம்.

*Fluido* 

Unibody வடிவமைப்பு, அமைதியான செயல்பாடு மற்றும் உயர்ந்த காற்றோட்டத்துடன் கூடிய பிரீமியம் டிசைனர் இண்டக்ஷன் ஃபேன் இது. தனித்துவமான யூனிபாடி வடிவமைப்பு-தடையற்ற மற்றும் சுத்தமான, நவீன தோற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த சத்தத்துடன் மேம்பட்ட காற்று விநியோகத்திற்கான ஏரோடைனமிக் விசிறிகள் கொண்டது. உயர் தர ABS வடிவமைப்பு சுத்தம் செய்ய எளிதானது. திறமையான, நிலையான செயல்திறனுக்காக ஆக்டிவ் பவர் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது .

இண்டக்ஷன் மோட்டார் தொழில்நுட்பம் அமைதியான, நம்பகமான செயல்பாட்டை வழங்குகிறது .  பிரீமியம் வண்ணங்கள் கொண்ட மிருதுவான அழகியல்-வடிவம் மற்றும் செயல்பாட்டின் உண்மையான கலவை இதன் தனித்துவம்.  சந்தையில் வேறு எந்த ஃபேன்-னும் இந்த வடிவமைப்பையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கே கொண்டதில்லை என்பது இதன் தனிச்சிறப்பு.Fluido ஒரு ஃபேன் மட்டுமல்ல-இது நவீன வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட அழகியல் முற்போக்கு வடிவமைப்பு. ஆற்றல் மற்றும் திறமையான குளிரூட்டும் அனுபவம் தரும் இது உருவாக்கப்பட்டது என்பதை விட சிற்பமாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.

*Superflo*

260 CMM ஏர் டெலிவரி கொண்ட இந்தியாவின் ஒரே ஃபேன் இது. ஒப்பிடமுடியாத காற்றோட்டம் மற்றும் கடினமான செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் முன்னணி தயாரிப்பாக, 260 CMM காற்று விநியோகத்தை வழங்குகிறது.  இந்த பிரிவில் இது சக்திவாய்ந்த குளிரூட்டலை வழங்குவதில் முதன்மையானது.  அதிகபட்ச காற்று வழங்குவதோடு, பரவலான பகுதிகளுக்கு காற்று வழங்கும் அல்ட்ரா-வைட் ஏரோடைனமிக் விசிறிகள் கொண்டது.
சிறந்த செயல்திறன் மற்றும் அதிவேக நிலைத்தன்மையை உறுதி செய்யும் ஹெவி-டூட்டி மோட்டருடன் கட்டமைக்கப்பட்ட இது, டர்போ பூஸ்ட் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. காற்றை வேகமாகவும் தூரமாகவும் பரவச்செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஆயுள் கொண்ட அலுமினிய விசிறிகள் மற்றும் பாகங்களுடன் உருவாக்கப்பட்டது.  கடலோரம் அல்லது அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் கூட காற்றினால் ஏற்படும் அரிப்பு சேதத்தை எதிர்த்து, நீண்ட கால ஆயுளுக்கு ஏற்றது.
உயர் செயல்திறன், நீடித்த வலிமையை இந்த ஃபேன் வழங்குகிறது. கடினமான சூழ்நிலைகளில் கூட திறம்பட செயல்பட கட்டமைக்கப்பட்டுள்ள இது, நவீன கட்டட வடிவமைப்புகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில், கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.

Superflo என்பது உச்சபட்ச உயர் செயல்திறன் கொண்ட ஃபேன். சக்திவாய்ந்த காற்றோட்டம், கடினமான கட்டமைப்பு மற்றும் நீடித்த இது மதிப்பை வழங்குகிறது.