கிரி டிரேடிங் ஏஜென்சி ‘லக்ஷ்மியின் கம்பராமாயணம்’ புத்தக வெளியிட்டு விழா ; காலம் கடந்து நிற்கும் தமிழ் இலக்கியம் மற்றும் பக்திக்கு புகழஞ்சலி
சென்னை, இந்திய கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் பாரதத்தின் பெருமைகளான இலக்கிய இதிகாசங்களை கட்டிக் காத்து பாதுகாத்து வரும். எமது நிறுவனம் தற்போது, கவி லட்சுமி ரவி அவர்கள் எழுதிய லட்சுமியின் கம்பராமாயணம் என்ற புத்தகத்தை வெளியிட்டதில் பெருமை கொள்கிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கிரி ஹிந்து ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த இந்த வெளியீட்டு விழாவில் மகாகவி பாரதியாரின் வம்சாவளி, கம்பனின் அடிப்பொடி, இலக்கியவாதி திருமதி இரா. உமா பாரதி அவர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டதோடு, கம்பராமாயனத்தின் இலக்கிய நயம் குறித்தும் பேசினார்.
வால்மீகி ராமாயணத்தின் மறு சிந்தனையாக கம்பன் உருவாக்கிய ராமாயணத்தின் கவிதை வடிவே இப் புத்தகம். இது அனைத்து வயதினரும் படிப்பதற்கு ஏதுவாகவும், குறிப்பாக மாணவர்கள், தமிழார்வலர்கள், ஆய்வு மேற் கொள்பவருக்கும் இலக்கியவாதிகளுக்கும் நிச்சயம் பயனளிக்க கூடியதாக இருக்கும்.
விழாவின் முக்கிய அம்சமாக இராமாயண இதிகாசத்தின் சுவையான பகுதிகள் கற்றறிந்த வல்லுனர்கள் மற்றும் ஆன்மிகவாதிகளால் விவாதிக்கப்பட்டது.
கிரியின் புத்தகப் பிரிவு இயக்குனர் திரு. ராம நாராயணன் அவர்கள் பேசுகையில், கிரி காலம் கடந்து நிற்கும் இலக்கியங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பேணுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. லக்ஷ்மியின் கம்பராமாயணம் தமிழ் இலக்கிய மரபைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் பக்தி மற்றும் நீதிக் கருத்துக்களை தெரிவிப்பதாக உள்ளது. இந்த புத்தகத்தினை வெளியிடுவதன் மூலம் கிரி கலாச்சார இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பை தந்து இருக்கிறது என்பதை நினைத்துப் பெருமை படுகிறது.
கிரி பற்றி
1951 முதல் நம்பிக்கைக்குரிய அடையாளமான ஒன்றாக, கிரி நிலைபெற்றுள்ளது. நமது பாரதத்தின் அம்சமான ஆன்மீகம் சார்ந்துள்ள பூஜை பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்பதற்கான முதன்மையான சில்லறை விற்பனைநிலையமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற கிரி, புத்தகங்கள்,பூஜைப் பொருட்கள், சிலைகள், பாரதிய பண்டிகை பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உடைகள் என்று பொருட்களின் விற்பனையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை கிரி தனது 70 ஆண்டு கால சேவையின் வாயிலாக பூர்த்தி செய்து வருகிறது.
தமிழ்நாடு கர்நாடகா தெலுங்கானா புதுச்சேரி மகாராஷ்டிரா புதுடெல்லி மாநிலங்களிலும், சர்வதேச அளவில், அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும், 36 ஷோரூம்களை நிறுவி, தனது உலகளாவிய இருப்பை பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான மகளிர் மேம்பாடு மற்றும் சம-அதிகார பகிர்வை ஊக்குவித்து செயல்படுத்தியதற்காக, FICCI இன் உயரிய விருதையும், 2019ல் தமிழகத்தில் சுற்றுலா பயணிகளின் சிறந்த ஷாப்பிங் சென்டர் விருதையும் பெற்றுள்ளது.