கிராண்ட் சென்னை by ஜி.ஆர்.டி ஹோட்டலில் 417 கிலோ பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பின் முன்னோட்டமாக (dry fruit mixing) ட்ரை ஃப்ரூட் மிக்சிங் விழா பிரமாண்டமாக தொடங்கியது.
கிராண்ட் சென்னை by ஜி.ஆர்.டி. ஹோட்டல், வாடிக்கையாளர்களின் சேவைக்கு பெயர் பெற்றது. அங்குள்ள சவுத் கிரவுன் ஹாலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, செஃப் தாமு உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இந்த கேக் திருவிழா நடைபெற்றது.
உலர் பழங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் வாசனைப் பொருட்களின் கலவையில் 417 கிலோ எடையுள்ள இந்த கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் கிராண்ட் சென்னையின் தலைமை பொது மேலாளர் இளங்கோ ராஜேந்திரன், ஆடம்பரமான இந்த நிகழ்வில் பாரம்பரியத்தை நிலை நிறுத்தி, அரவணைப்பையும் தோழமையையும் செலுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

ஜி.ஆர்.டி. கிராண்ட் – இன் கார்ப்பரேட் செஃப் சீதாராம் பிரசாத் கூறும்போது உலர் பழங்கள் சுமார் 60 லிட்டர் ஆல்கஹாலில் ஊற வைக்கப்பட்டு பிளம் கேக் மற்றும் புட்டிங் தயாரிக்கப்பட உள்ளதாகவும், டிசம்பர் 15 ஆம் தேதி இந்த கேக் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.