கலைவளர்மணி ஸ்ரீமதி மற்றும் வெங்கட சுப்ரமணியன் தம்பதியரின் மகள் விபா வெங்கட்டிற்கு சலங்கை பூஜையும் மற்றொரு மகள் ஸ்ம்ரிதி வெங்கட்டிற்கு பரதநாட்டிய அரங்கேற்றமும் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சுந்தரேசுவரர் அரங்கத்தில் ஸ்ரீமதி- வெங்கட சுப்ரமணியன் தம்பதியரின் இளைய மகளான விபா வெங்கட்டுக்கு சலங்கை பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மதுவந்தியும் சிறப்பு விருந்தினராக ஆர்.சேகரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் சிதம்பரம் அகாடமியின் இயக்குனர் பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன், கலைமாமணி குற்றாலம் எம்.செல்வம், கலாசூரி திவ்யா சுஜென் உள்ளிட்டோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்ட ஸ்ம்ரிதி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வின் நட்சத்திரங்களான விபா வெங்கட், மற்றும் ஸ்ம்ரிதி வெங்கட் ஆகிய இருவரும் துபாயில் முறையே 2 ஆம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இருப்பினும் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீது பாரம்பரியமாக ஈடுபாடுள்ள குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இருவரும் முறையே கற்ற கலையை பார்வையாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் விருந்து படைத்தனர்.