இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) மகளிர் பிரிவான FICCI FLO சென்னையின் தலைவர் டாக்டர்.சி.ஏ. திவ்யா அபிஷேக் ஒருங்கிணைத்த விவாத நிகழ்ச்சியில் தன்னுடைய பல்வேறு அனுபவங்களை பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் பகிர்ந்து கொண்டார்.
தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை பெற்ற ஷ்ரேயா கோஷல் பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரல் மூலம் முத்திரை பதித்து, இசையுலகில் தன்னிகரற்ற பாடகியாக உள்ளார். அவர் திவ்யா அபிஷேக்குடன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி நெக்ஸ்பீரியன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிந்தனையைத் தூண்டும் இந்த விவாத நிகழ்ச்சியின்போது, ஸ்ரேயா கோஷல் இந்திய இசைத் துறையில் தனது பயணத்தைப் பற்றியும், தனது அனுபவங்கள், சவால்கள் மற்றும் வெற்றிகளைப் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை பகிர்ந்து கொண்டார். இசை மீதான தனது ஆர்வம், தொழில்துறையின் பரிணாமம் மற்றும் கலைக்கு உண்மையாக இருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் ஷ்ரேயா கோஷல் எடுத்துரைத்தார்.
தனிப்பட்ட வளர்ச்சியுடன், தொழில்முறை சிறப்பை சமநிலைப்படுத்துவது குறித்த அவரது எண்ணங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. இசையைத் தாண்டி, சமூக செயற்பாடுகளிலும் ஷ்ரேயா கோஷல் பெரும் பங்களிப்பு வழங்கி வருகிறார். குழந்தை நலன், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு சமூக முன்முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். தனது பிரபலம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி தீவிர பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தனது குரலைப் பதிவு செய்துவருகிறார். இதனால் அவர் ஒரு உண்மையான முன்மாதிரியாக இருக்கிறார்.
இந்நிகழ்ச்சி குறித்து உரையாற்றிய டாக்டர். திவ்யா அபிஷேக், ஸ்ரேயா கோஷலின் பயணம், அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும் என்றும், அவரது பேச்சு, ஊக்கமளிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தன என்றும் கூறினார். இந்த மாலை பெண்மையின் உணர்வுக்கும் விடாமுயற்சியின் சக்திக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரேயா கோஷலின் ஆல் ஹார்ட்ஸ் டூர் வரும் மார்ச் 1 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து ஷ்ரேயா கோஷல் தெரிவிக்கையில், சென்னை எப்போதுமே தனக்கு ஒரு சிறப்பு இடமாக இருந்து வருகிறது என்றும் தனது ஆல் ஹார்ட்ஸ் சுற்றுப்பயணத்தை சென்னையில் நடத்துவதில் தான் முற்றிலும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரவணைப்பு, ஆற்றல் மற்றும் அன்பு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மறக்க முடியாததாக ஆக்குகிறது என்று கூறிய ஷ்ரேயா கோஷல், தனது இசையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் களாத்திற்காக ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் 475 க்கும் மேற்பட்ட FICCI FLO உறுப்பினர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், இது இசை மற்றும் கொண்டாட்டத்தின் பிரமாண்டமான காட்சியாக அமைந்தது.
சென்னையில் ஆல் ஹார்ட்ஸ் சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகள் பிரத்யேகமாக சொமேட்டோ மூலம் விற்கப்படுகின்றன.