இந்தியா முழுவதும் 1 லட்சம் தேர்ந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவோம் என இந்திய நீச்சல் சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.என்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள சவேரா விடுதியில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் இந்திய நீச்சல் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கடந்த ஆண்டின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளைப் பற்றி விவாதித்தனர். பின்னர் நடத்தபட்ட தேர்தலில் தற்போது தலைவராக உள்ள ஆர்.என்.ஜெயபிரகாஷ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் செயலாளராக மோனல் சோக்ஷி, மற்றும் பொருளாளராக சுதேஷ் நாக்வெங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

