அப்போலோ மருத்துவமனை தனது அதிநவீன பக்கவாத சிகிச்சை நெட்வொர்க்கின் மூலம் 4.5 மணி நேர பக்கவாத சிகிச்சை வசதியை 24 மணி நேரமும் அளிக்கிறது!

0
235

அப்போலோ மருத்துவமனை தனது அதிநவீன பக்கவாத சிகிச்சை நெட்வொர்க்கின் மூலம் 4.5 மணி நேர பக்கவாத சிகிச்சை வசதியை 24 மணி நேரமும் அளிக்கிறது!

  • இந்தியாவில் ஆண்டுதோறும் 80 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பக்கவாதத்தினால் புதிதாக பாதிக்கப்படுவதாக தெரிய வந்திருப்பது பெரும் கவலையை அளிப்பதாக அமைந்திருக்கிறது. 

சென்னை, உலக பக்கவாதம் தினமான அக்டோபர் 29-ம் தேதியன்று   2024 [World Stroke Day 2024], இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்கவாத பாதிப்புகளை  நிவர்த்தி செய்வதில்,   அப்போலோ மருத்துவமனைகள் கொண்டிருக்கும் அக்கறையும், அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. 2021-ம் ஆண்டில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.25 மில்லியனாக இருந்தது.  ஆனால் 2023-ம் ஆண்டில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.8 மில்லியனாக அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது (ஐஎஸ்ஏ படி). இதையடுத்து அப்போலோ மருத்துவமனைகள் மக்களிடையே பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதோடு, ஆரம்பநிலையிலேயே பக்கவாத பாதிப்பை கண்டறிந்து, அதற்கான ஒரு முழுமையான சிகிச்சையையும் பராமரிப்பையும் அளித்து, நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளில் முன்னேற்றத்தை கொடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதில் அப்போலோ மருத்துவமனைகள் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

பக்கவாத பாதிப்பு இருப்பது தெரியவந்த உடனேயே, சிகிச்சை பெற வேண்டியது மிக மிக அவசியம். பாதிப்பு ஏற்பட்ட முதல் 4.5 மணி நேரத்தை மருத்துவ உலகில் ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கிறார்கள். காரணம் இந்த 4.5 மணிநேரத்திற்குள்ளாக தக்க தருணத்தில் பக்கவாத பாதிப்பிற்கான சிகிச்சையை அளிப்பதன் மூலம் பக்கவாத பாதிப்பான உடல் செயல்பட இயலாத நிலையைக் குறைப்பதிலும், பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சென்னை அப்போலோ மருத்துவமனைகள், அதிநவீன ரோபோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் மேம்படுத்தப்பட்ட நோயறியும் கருவிகள் மற்றும் பக்கவாத நோயாளிகளுக்கு விரைவாகவும் திறம்படவும் சிகிச்சை அளிக்க பல்நோக்கு சிறப்பு சிகிச்சை நிபுணர்களின் குழு என  ஒரு முழுமையான மருத்துவ பராமரிப்புக்கு அவசியமானவற்றை ஒருங்கிணைத்து முழுவீச்சியில் சிகிச்சைகளை வழங்கி வருகிறது. நாளத்தில் பெரும் அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு த்ரோம்பெக்டோமி [thrombectomy] சிகிச்சையளிப்பது, பக்கவாதம் தொடங்கிய 24 மணி நேரம் வரை பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறை நோயாளிகள் குணமடைவதில் மிகச்சிறப்பான வாய்ப்புகளை அளிப்பதோடு, பாதிப்பினால் உண்டாகும் சிக்கல்களைக் குறைக்க செய்வதோடு அவர்களது  வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த உதவுகிறது.

பக்கவாத பாதிப்பிற்கு சிகிச்சையளிக்கும் அப்போலோ மருத்துவமனையின் ஸ்ட்ரோக் நெட்வொர்க் பக்கவாத சிகிச்சைக்கு நோயாளியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான மருத்துவ அணுகுமுறையை வழங்குகிறது, ஒவ்வொரு நோயாளியும் தக்க நேரத்தில், மிகத்துல்லியமான சிகிச்சையைப் பெறுவதையும் உறுதிசெய்கிறது.  நாள் முழுவதும் வழங்கப்படும் 24/7 அவசரகாலச் சேவைகள், செயற்கை நுண்ணறிவினால் மேம்படுத்தப்பட்ட நோய் கண்டறியும் வசதிகள் மற்றும் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ பெர்ஃப்யூஷன் ஆய்வுகள் போன்ற மேம்பட்ட இமேஜிங் நுட்பங்களைக் கொண்டிருக்கும் மருத்துவமனைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு தளத்தையும் அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது நோயாளிகளிடையே மிக விரைவாகவும், துல்லியமாகவும் நோயைக் கண்டறிய உதவுகிறது.  மேலும் த்ரோம்போலிசிஸ் த்ரோம்பெக்டமி [Thrombolysis & Thrmombectomy] போன்ற சிறந்த சிகிச்சைகளைத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. மேலும் நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மெல்லிய துளை மூலம் சிகிச்சையளிக்கும் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தீவிர நிபுணர்கள் [neurologists, neurosurgeons, neuro intervention specialists, & critical care intensivists] ஆகியோர் உள்ளிட்ட ஒரு சிறப்பு மருத்துவக் குழு, அந்தந்த நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக திட்டமிடப்பட்ட, பல்வகை சிறப்பு சிகிச்சைகளை வழங்குகிறது. பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட கால பிடிக்கும் சூழலில் நோயாளிகளுக்கு உதவுவதற்கும், பக்கவாதத்திற்கு பின்னர் நோயாளிகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட வலுவான நரம்பியல் மறுவாழ்வு சேவைகளை இந்த நெட்வொர்க் வழங்குகிறது. மேலும் இந்நெட்வொர்க் முழுமையான சிகிச்சைமுறையை செயல்படுத்துவதற்க்காக நோயாளிகளின் உடல்ரீதியான மற்றும் மனரீதியான தேவைகளை பூர்த்தி செய்கிறது.

டாக்டர். சீனிவாசன் பரமசிவம் கூறுகையில், “பக்கவாதம் என்பது நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் பெரும் பாதிப்புகளையும், இடர்பாடுகளையும் உருவாக்கக்கூடும்.. அப்போலோ மருத்துவமனைகளைப் பொறுத்த வரையில், பக்கவாத சிகிச்சையில் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய சூழலையும், சிகிச்சைக்கான துல்லியத்தையும் நாங்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறோம். எங்கள் பல்துறை சிறப்பு சிகிச்சை குழுவானது, பாதிப்பு ஏற்பட்ட உடனே துரிதமாக மேற்கொள்ள வேண்டிய, உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயார்நிலையில் உள்ளது. ஆரம்பகால நோயறிதலில் கவனம் செலுத்துவதன் மூலம், எங்கள் நோயாளிகள் சிறந்த சிகிச்சை பலன்களை அடைவதற்காக நாங்கள் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார்.

டாக்டர். அருள் செல்வன் கூறுகையில், ” பக்கவாத சிகிச்சை தொடர்ந்து பல ஆண்டுகளாக குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதேபோல் இதற்கான சிகிச்சைகளில் எங்களது திறன்களும் கணிசமாக மேம்பட்டிருப்பதோடு, நிபுணத்துவமிக்கதாகி இருக்கின்றன. அர்ப்பணிப்புடன் கூடிய எங்களுடைய குழு மற்றும் அதிநவீன வசதிகள்,    நோயறிதல் முதல் மறுவாழ்வு வரையிலும், பாதிப்பிலிருந்து நீண்டகாலம் மீண்டு  வருவதில் நேர்மறையான விளைவுகளை மேம்படுத்துவது என நோயாளிகள் முழுமையான சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்கிறது..”

அவசர சிகிச்சையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நோயறியும் சோதனையுடன்,  அப்போலோ மருத்துவமனைகள் பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அவர்களாகவே தன்னிச்சையாக செயல்படுவதை மீண்டும் பெறவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சிறப்பு நரம்பியல் மறுவாழ்வு சேவைகளை வழங்குகிறது. நரம்பியல் மறுவாழ்வு நிபுணர்களால் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்கள், ஒவ்வொரு நோயாளியின் குறிப்பிட்ட தேவைகளையும் பூர்த்தி செய்து, அவர்கள் இழந்த உடல் இயக்க செயல்பாடுகளை மீட்டெடுக்கவும், உடல் இயக்கத்தை மேம்படுத்தவும், பக்கவாதத்திற்குப் பிந்தைய வாழ்க்கையின் உயர் தரத்தை அடையவும் ஆதரவு கரம் நீட்டுகின்றன.

நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சையில்  ஆழ்ந்த அனுபவமும், நிபுணத்துவமும் உள்ள சென்னை அப்போலோ மருத்துவமனைகள், பக்கவாத நோய் பராமரிப்பு மற்றும் மேலாண்மையில் புதிய எல்லைகளைத் தொடுவதற்கும், இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புக்கான புதிய வரையறைகளை உருவாக்குவதற்கும், பக்கவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை ஆதரிப்பதற்கும் தனது ஆதரவுக்கரத்தை அளித்து வருகிறது.