ஹெச்.என்.ஐ. மற்றும் என்.ஆர்.ஐ. வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சொத்து மேலாண்மை சேவைகளை வழங்குவதற்காக டிபிஎஸ் வங்கி தனது ஆசிய அளவிலான நெட்வொர்க் மற்றும் டிஜிட்டல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது!
- டிபிஎஸ் வங்கி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக (என்.ஆர்.ஐ.) டிஜிட்டல் வங்கி கணக்கை அறிமுகப்படுத்துகிறது. இந்த முறையில் புதிய வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கைத் தொடங்குவதை எளிமையாக்குவதோடு, ஆவணங்கள் சமர்ப்பிப்பதையும் எளிதாக்கி இத்துறையிலேயே விரைவாக வெறும் 60 நிமிடங்களில்[1] வங்கிக் கணக்கை தொடங்க உதவுகிறது.
- டிபிஎஸ் வங்கி, பெங்களூரு இந்திராநகரில் தனது புதிய உயர் தர சேவைக் கிளையைத் தொடங்குகிறது. இக்கிளையானது உயர் நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இருக்கும் தங்களது சொத்து மற்றும் முதலீடுகளுக்கான வங்கி சேவைகளையும், வெளிநாடுகளில் அமைந்திருக்கும் சொத்து மற்றும் முதலீடுகளுக்கான வங்கி சேவைகளையும் [onshore & offshore banking needs] வழங்குவதற்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- டிபிஎஸ் வங்கி மூலம் உயர் நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ஆசியாவில் உள்ள டிபிஎஸ் வங்கியின் ஆறு முக்கிய சந்தைகளிலும் பிரீமியம் வங்கி சேவைகளைப் பெறலாம்; ஒரு சந்தையில் டிபிஎஸ் ட்ரஷர்ஸ் [Treasures] வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு டிபிஎஸ் வங்கியின் அனைத்து சந்தைகளிலும் டிபிஎஸ் ட்ரஷர்ஸ் சலுகைகளை வழங்கப்படுகிறது.
சென்னை, 3 டிசம்பர், 2024 – டிபிஎஸ் வங்கி, இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்கள் அடங்கிய மேம்பட்ட சொத்து மேலாண்மை சேவைகளை அறிவித்துள்ளது. டிபிஎஸ் வங்கி தற்போது வழங்கி வரும் சேவைகளோடு, என்.ஆர்.ஐ.கள் மற்றும் ஹெச்.என்.ஐ.களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய, டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மேம்பட்ட சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவின் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாகத் திகழும் பெங்களுருவில் உள்ள இந்திராநகரில் டிபிஎஸ் வங்கி தனது மூன்றாவது உயர் தர சேவைக் கிளையைத் திறந்திருப்பதன் மூலம் தனது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஹெச்என்ஐ மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சிறப்பு வசதிகளுடன், நாடுகடந்த தீர்வுகளையும் வழங்குகிறது. இதன் தொடர்ச்சியாக ஹெச்.என்.ஐ மற்றும் என்.ஆர்.ஐ வாடிக்கையாளர்கள் இனி உள்நாட்டு மற்றும் உலகளாவிய வங்கிச் சேவைகளைப் பெறமுடியும். புதிய கிளையின் ஆரம்பம் மூலம், பெங்களூருவில் ஏற்கனவே வங்கி சேவைகளை அளித்துவரும் 26 டிபிஎஸ் கிளைகளின் பட்டியல் விரிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் டிபிஎஸ் வங்கி செயல்பாடுகளில் பெங்களூருவுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு மிகப்பெருமளவில் இந்தியாவில் நிதிச்செல்வம் அதிகரித்து இருக்கிறது. 2023-ம் ஆண்டில் சுமார் 588 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நிதிச்செல்வம் இந்தியாவில் உருவாகியுள்ளது. இது வருகிற 2028[2].-ம் ஆண்டுவாக்கில் சுமார் 730 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நிதிச்செல்வம் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வச் செழிப்பில் உருவாகியிருக்கும் இந்த அதிகரிப்பு, புதிய வாடிக்கையாளர் தேவைகளுக்கான அவசியத்திற்கும் வழிவகுத்திருக்கிறது. மேலும் உலகளவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் இணைத்து பார்க்கப்படுகிறது. இதனால் தனிப்பட்ட, வணிகம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அடிப்படையாக கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.
டிபிஎஸ் வங்கி ஆசியா முழுவதும் தனது செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தியுள்ளது. மேலும் அதன் மேம்பட்ட டிஜிட்டல் திறன்கள் பல்வேறு சிறப்பு சேவைகளையும் வசதிகளையும் பிரத்தியேகமாக வடிவமைத்து வருகின்றன. இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் 30 லட்சத்திற்கும் மேல் மதிப்புடைய டிபிஎஸ் ட்ரெஷர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான வங்கி-வாடிக்கையாளர் உறவை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாக தனிப்பயனாக்கப்பட்ட செல்வ மேலாண்மை தீர்வுகளின் முழுத் தொகுப்பையும் பெறுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. மேம்பட்ட சேவைகளை வழங்கும் வகையில் அனுபவம் வாய்ந்த உறவு மேலாளர்கள், பிரத்தியேக சேவைகள் மற்றும் நம்பகமான டிபிஎஸ் நெட்வொர்க்கின் நன்மைகள் என பல அம்சங்களை டிபிஎஸ் வாடிக்கையாளர்கள் பெறமுடியும். சிங்கப்பூர், ஹாங்காங், தைவான், இந்தோனேஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய ஆறு முக்கிய டிபிஎஸ் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச நிதி பரிமாற்றங்களுக்கான முன்னுரிமை அளிக்கும் வகையிலான FX விகிதங்கள், குறைந்த சேவைக் கட்டணம் மற்றும் ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கு பூஜ்ஜிய கட்டணம் [preferential FX rates for international fund transfers, waived service fees, zero ATM withdrawal fees] உள்ளிட்ட முழுமையான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 2023-ம் ஆண்டில், டிபிஎஸ் வங்கி தனது சூப்பர்-பிரீமியம், சிறப்பு அழைப்பு அனுமதி இருந்தால் மட்டுமே பெறக்கூடிய கிரெடிட் கார்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த டிபிஎஸ் வாண்டேஜ் கார் [Vantage Card], அதிக நிகர மதிப்புள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு பிரத்தியேக சலுகைகளை வழங்குகிறது. இந்த கார்ட் அளிக்கும் பயன்களில் சர்வதேச அளவில் செலவிடும் ஒவ்வொரு 200 ரூபாய்க்கும் 8 வாண்டேஜ் புள்ளிகள் [Vantage Points] (1 VP = ₹1), சிங்கப்பூரில் மேற்கொள்ளும் சர்வதேச பரிவர்த்தனைகளில் பூஜ்ய அந்நிய செலாவணி மார்க்-அப் மற்றும் இதர இடங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.75% குறைந்த அந்நிய செலாவணி மார்க்-அப்[3] போன்ற சிறப்பு பலன்களும் அடங்கும்.
டிபிஎஸ் வங்கி தனது புதிய என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கணக்கு தொடங்கும் அனுபவத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இவர்கள் ஒரு மணி நேரத்திற்குள்ளாக [ஆவணங்கள் சமர்ப்பிப்பது தவிர்த்து – prior to document submission] தங்களது புதிய கணக்கை தொடங்குவதற்கான அனைத்து செயல்முறைகளையும் முடித்துவிட உதவுகிறது. புதிய வாடிக்கையாளராக தங்களுக்கான வங்கி சேவைகளைத் தங்குதடையின்றி தொடர புதிய வரையறைகளை உருவாக்கி இருக்கிறது. பல்வேறு இடங்களில் வசிக்கும் வாழ்க்கை முறையின் தேவைகளுக்கு ஏற்ப, உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளும் வியூ-ஆக்சஸ் வசதியுடன் தங்களது டிபிஎஸ் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். அதேபோல் டிபிஎஸ் மொபைல் அப்ளிகேஷன் பிளாட்ஃபார்ம் மூலம் தங்கள் விண்ணப்பத்தின் நிலையையும் கண்காணிக்கவும் முடியும். வியூ ஆக்சஸ் வசதியானது, நிதி எடுப்பதைத் தவிர, சேமிப்புக் கணக்கின் செயல்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. கட்டாய ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் முழு கணக்குக்கான செயல்பாட்டின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம் மற்றும் பணத்தைத் திரும்ப எடுக்கலாம். புதிதாக நெறிப்படுத்தப்பட்ட டிபிஎஸ் வங்கியின் இந்த செயல்முறை, என்.ஆர்.ஐ. வங்கி சேவைகளை எளிதில் பெறுவதிலும், மேம்பட்ட செளகரியங்களுக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. மேலும் இது காகித ஆவணங்கள் மற்றும் கணக்கு தொடர்பாக பின் தொடரவேண்டிய செயல்முறைகளுக்கு எடுத்து கொள்ளும் நேரத்தையும், முயற்சியையும் வெகுவாக குறைக்கிறது. இதையடுத்து வங்கி – வாடிக்கையாளர் இடையேயான அனுபவத்தை மிகவும் மேம்பட்டதாக, தங்கு தடையில்லாத ஒன்றாக உறுதி செய்கிறது.
டிபிஎஸ் வங்கி இந்தியாவின் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ட்ரெஷர்ஸ் பிரிவின் தலைவர் ரிச்சா திரிபாதி [Richa Tripathi, Head – Wealth Management and Treasures, DBS Bank India] கூறுகையில், “30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள உயர் நிகர மதிப்புள்ள இந்தியர்களின், எதிர்பார்புகளை விருப்பங்களைப் பற்றிய ஆழ்ந்த புரிதலை டிபிஎஸ் வங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் செல்வத்தை உருவாக்கும் முறை என்பது மிகவும் பரவலாக்கப்பட்ட ஒன்றாகி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் வலுவான செயல்பாடுகள் கொண்டிருப்பது அவசியமாகி இருக்கிறது. டிபிஎஸ் வங்கி இந்தியாவின் கிளைகளின் தொடர் செயல்பாடுகள் மிகப்பரவலான, மாபெரும் நெட்வொர்காக இருப்பதோடு, மேம்பட்ட டிஜிட்டல் நிபுணத்துவத்துடன் இணைந்து, அதன் ‘ஃபிஜிட்டல்’ [‘phygital’] செயல்பாட்டு உத்தியை மேலும் வலுவுள்ளதாக்கி இருக்கிறது. இது இந்தியாவில் மிக துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் புதிய செல்வங்களுக்கான மேலாண்மையை விரிவான முறையில் சேவை மேற்கொள்ள உதவுகிறது. அதே நேரத்தில், பெங்களூருவின் தொழில் முனைவோர் சூழலும், முதலீட்டுச் செல்வங்களின் மதிப்பில் உண்டாகி வரும் அதிகரிப்பும் எங்கள் பிரீமியம் வங்கி தயாரிப்புகள் மற்றும் பலதரப்பட்ட சேவைகளை முன்னோடித்துவத்துடன் செயல்படுத்துவதற்கு மிகச்சிறந்த சந்தையாக இருக்கிறது.
பெங்களூரில் உள்ள புதிய சிக்னேச்சர் டிபிஎஸ் கிளையானது, டிபிஎஸ் வங்கி இந்தியாவின் செல்வ செழிப்புடன் வசதியாக இருக்கும் வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மிகவும் பிரத்தியேகமான சேவைகளை வழங்கும். என்.ஆர்.ஐ.களுக்கு என டிபிஎஸ் வங்கி இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கும் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கைத் தொடங்குவதற்கான தீர்வு, தடையற்ற, இருப்பிடம் பற்றிய கவலை இல்லாத அனுபவத்தை வழங்குவதன் மூலம் மேலும் அதிக மதிப்பை பெற அவர்களுக்கு உதவுகிறது.
இந்தியாவை அடித்தளமாக கொண்டு ஆசியா செல்வ மதிப்பில் வளர்ச்சி கண்டு வரும் மையமாக இருக்கிறது. மேலும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டிபிஎஸ் வங்கி, இந்திய மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு ஆசியாவில் நாங்கள் கொண்டிருக்கும் தொடர் செயல்பாடுகளின் மூலம் அனைத்து நன்மைகளையும், பயன்களையும் கொண்டு வர நாங்கள் உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.’’ என்றார்.
இந்தியாவில் உள்ள டிபிஎஸ் வங்கியானது “டிபிஎஸ் கோல்டன் சர்க்கிள்” என்று அழைக்கப்படும் ஒரு பிரத்தியேகமான திட்டத்துடன் இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமக்கள்களுக்காக தனது செல்வ மேலாண்மை அணுகுமுறையை வடிவமைத்துள்ளது, இது இந்த மூத்த குடிமக்களின் நிதித் தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சேவைகள், அவர்களை ‘Live more, Bank Less’ என்ற தத்துவத்துடன் உற்சாகமாக வங்கி சேவைகளைப் பெற உதவுகிறது.