வேலம்மாள் மாணவர் தமிழ்நாடு மாநில சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை

0
229

வேலம்மாள் மாணவர் தமிழ்நாடு மாநில சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று சாதனை.

2021 ஜூன் 2 முதல் 3 வரை இணைய வழியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இணையவழி திறந்த வெளி சதுரங்கப் போட்டிகளின் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு  முதல் பரிசைப் பெற்றதன் மூலம் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா
பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்மாஸ்டர் வி.பிரணவ் மாபெரும் வெற்றியாளராக உருவெடுத்துள்ளார்.   இந்த மகத்தான வெற்றியின் மூலம் செல்வன் பிரணவ் வரவிருக்கும் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.
இந்த சாம்பியன்ஷிப்பை மதுரை மாவட்ட சதுரங்கச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கச் சங்கம் ஆகியவற்றின் சார்பாக கோல்டன் நைட் செஸ் அகாடமி ஏற்பாடு செய்திருந்தது.
9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த மெய்நிகர் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 182 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.
பள்ளி நிர்வாகம் மாணவன் பிரணவைப் பாராட்டியதுடன் அவரது முன்மாதிரியான சாதனைக்காகவும், எதிர்காலத்தில் பல்வேறு விருதுகளைப் பெறவும் வாழ்த்துகிறது.